உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை
உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை (Implantable Collamer Lens) என்பது பார்வை குறைபாடுகளைச் சரி செய்யும் சிகிச்சைக்கு உதவும் லென்ஸ் ஆகும். ஆங்கிலத்தில் இதனைச் சுருக்கமாக ICL என்று அழைப்பார்கள். கண்ணின் மேற்புறத்தில் சென்று பாரம்பரியத் தொடர்பு லென்சுகள் போலல்லாமல், இவை (ஐசிஎல்) [1] கருவிழி (கண் வண்ண பகுதி) மற்றும் இயற்கை லென்சுக்கு இடையே கண்ணுக்குள்ளே பொருத்தப்படும். லென்ஸ் கண் உள்ளே நிரந்தரமாக இருக்கும். எனினும், இந்த லென்சைப் பொருத்திக்கொண்ட பின்னர் ஒருவரது பார்வை காலப்போக்கில் மாறுகிறது அல்லது குறைகிறது என்றால், லென்சை எளிதாக நீக்க அல்லது அதற்குப் பதிலாகப் புதிய லென்சைப் பொருத்த முடியும். ஐசிஎல் பற்றிஉள்விழி லென்சினைக் (IOL) கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தி நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைத் தழுவிப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய முயற்சி அல்லது கண்டுபிடிப்பு உட்பொருத்தக்கூடிய காலமர் (Collamer) கண்ணாடி வில்லை ஆகும். ஐசிஎல் (ICL) நடைமுறைக் கண்புரை அறுவை சிகிச்சையில் இருந்து வேறுபடுகிறது. கண்புரை முறையில் இயற்கை லென்ஸ் கண் விழியில் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக IOL வகை லென்ஸ் பொருத்தப்படும் ஆனால் ஐசிஎல் (ICL) காலமர் லென்ஸ் இயற்கை லென்ஸ் முன் வைக்கப்படும். பொதுவாக லேஸிக் சிகிச்சைக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்த ICL சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும். செயல்முறை
ஐசிஎல் பொருத்திக்கொள்ளத் தகுதிகள்
மேலும் காண்கமேற்கோள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia