உயரக் கற்றாழை
உயரக் கற்றாழை (Saguaro) என்பது சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் மிக உயரமாக வளரும் மரமாகும். இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. அடி மரம் 2 அடி விட்டம் கொண்டது. தூண் போன்ற பல கிளைகளைக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்று இருக்கும். கிளைகளின் முனைகளில் 10 செ.மீ. நீளமுடைய அழகிய வெள்ளை நிற புனல் வடிவப் பூக்கள் உண்டாகும். இப்பூக்கள் நண்பகல் நேரத்தில் வெடிக்கும். இதன் கனி சூன் மாதத்தில் பழுக்கும். இது ஊதா கலந்து செந்நிறமாக இருக்கும். அரிசோனா நாட்டில் பாப்பாகோ இந்தியர்கள் இதை உணவாக உண்கிறார்கள். விதை கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.[3][4] சிறப்புப் பண்புகள்இம்மரம் 250 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. ஒரு இஞ்ச் வளர 30 வருடங்கள் ஆகிறது. அரிசோனாவிலும் மெக்ஸிகோ, கலிபோனியா ஆகிய இடங்களில் பாறை நிறைந்த பகுதியிலும் மலைப்பகுதியிலும் இவைகள் நன்கு வளர்கின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia