உயிர்ம நெகிழி![]() ![]() ![]() நெகிழியின் ஒரு வகையான உயிர்ம நெகிழி தாவரக் கொழுப்பு, எண்ணெய்கள், சோள மாவு, பட்டாணி மாவுச்சத்து, நுண்ணுயிரிகள் முதலிய புதுப்பிக்கத்தக்க உயிரி ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.[1][2] இந்த புதைபடிவ எரிபொருள் நெகிழிகளுக்கு பெட்ரோலியம் மூலப் பொருளாக உள்ளது. இவை அரிதான படிம எரிபொருட்களிலிருந்து உருவாக்கப்படுவதால் பச்சையக வாயுவின் உற்பத்திக்கு காரணமாகிறது. ஒரு சில உயிரி நெகிழிகள் மாத்திரம் சிதைவடைவதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்கும் உயிரி நெகிழிகள் உற்பத்தி செய்யப்படும் முறையைப் பொறுத்து, காற்றுள்ள சூழலிலும் காற்றில்லாத சூழலிலும் சிதைவடைகின்றன. மாவுப்பொருட்கள் மரநார் அல்லது உயிரிபலப்படி சேர்மங்கள் உட்பட பல பொருட்களால் ஆனது உயிர் நெகிழி ஆகும். உணவுப் பாத்திரங்கள், உணவு பொருட்கள், மற்றும் மின் காப்பு பொருட்கள் ஆகியவை உற்பத்தி செய்வது உயிர்நெகிழியின் சில பொதுவான பயன்பாடுகள் ஆகும். பயன்பாடுகள்![]() ஒரு முறை பயன்பாட்டிற்கு பின் களைந்துவிடும் பொட்டலம், உணவு வழங்கும் பொருட்கள் (தட்டு, கரண்டி வகைகள், தொட்டிகள், கிண்ணங்கள்) போன்ற பொருட்கள் மக்கும் உயிர் நெகிழிகளால் ஆனவை. அவை பெரும்பாலும் பைகள், தட்டுக்கள், பழங்கள், காய்கறிகள், முட்டை, இறைச்சி முதலியவற்றிற்கான கொள்கலன்கள் குளிர்பானங்கள், பால் பொருட்களுக்கான பாட்டில்கள், பழங்கள், காய்கறிகளுக்கு கொப்புளப் பைகள் முதலியவை செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கைபேசி உறைகள், தரைவிரிப்பு நார்கள், மகிழூந்துகளுக்கான அலங்காரப் பொருள்கள், நெகிழி குழாய்கள் முதலியவை மறுமுறை பயன்படுத்தக் கூடிய உயிர் நெகிழியின் பயன்பாடுகள். புதியமின் செயல்திறன் உடைய உயிர்நெகிழிகள் மின்சார எடுத்துசெல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பயன்பாடுகளுக்கு மக்கும் திறனைவிட நிலைநிறுத்தக் கூடிய மூலப் பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய தன்மையே முக்கியமாகும்.[3] உடலில் பதியவைக்கும் பாலிலாக்ட்டைடிலான மருத்துவ உள்வைப்புகள், நோயாளிகளுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையை தவிர்கிறது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மாவுப் பொருளாலான பலபடி சேர்மங்களால் செய்யப்பட்ட கலப்பு தழைக்கூளப் படங்கள், பயன்பாட்டிற்கு பின்னர் சேகரிக்கப்பட வேண்டியது இல்லை, நிலத்திலேயே விட்டு விட முடியும். [4] நெகிழியின் வகைகள்மாவுச்சத்து சார்ந்த நெகிழிகள்உயிர்ம நெகிழிச் சந்தையில் 50 சதவிகிதம் வெந்நெகிழிகளாகும். இது தற்போது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உயிர்மநெகிழியாகும். தூய மாவுசத்து ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புடையது. அதனால் மருந்துவ துறையில் மருந்து மேலுறைகள் உற்பத்திச செய்யப் பயன்படுத்தப்படுகிறது. கிளிசரின், சார்பிடால் போன்ற இளக்கிகளும் நெகிழிகளும் சேர்ப்பதால் மாவு சத்தில் இருந்து தெர்மோ நெகிழிகள் உருவாக்கப்படுகின்றன இந்த கூடுதல் சேர்ப்பான்களின் அளவு மாற்றுவதன் மூலம், அதன் தன்மை குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. எளிய மாவுசத்து நெகிழியை வீட்டில் தயாரிக்க முடியும். தொழிற்சாலைகளில் மாவுசத்து சார்ந்த உயிர்ம நெகிழிகள் மக்கும் பாலியெஸ்டர்களுடன் கலக்கப்படுகிறது. இந்த கலவைகளில் முக்கியமான பொருள் மாவுசத்தாகும். இதனோடு பாலிகப்ரோலக்டோன் அல்லது இகோ ப்ளெக்ஸ்(பாலி புட்டிலீன் அடிப்பேட்கோடெரிப்தலேட்) சேர்க்கப்படும். இந்த கலவைகள் மக்கும் தன்மையுடையன. மற்ற தயாரிப்பாளர்கள் மாவுசத்து பாலி ஒலிபைன் கலவைகள் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள். இந்த கலவைகள் தொடர்புடைய பெட்ரோலிய அடிப்படையிலான நெகிழிகளோடு ஒப்பிடும்போது குறைந்த கரியமில தடம் உடையவை.[5] செல்லுலோஸ் சார்ந்த நெகிழிகள்![]() செல்லுலோஸ் உயிர்ம நெகிழிகள் முக்கியமாக செல்லுலோஸ் எஸ்டர், செல்லுலோஸ் அசிடேட் மற்றும் நைட்ரோ செல்லுலோஸ் மற்றும் செல்லுலாயிட் முதலியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. சில அலிபாடிக் பாலியெஸ்டர்கள்கொழுப்பார்ந்த உயிர் பாலியஸ்டர்கள் முக்கியமாக பாலி-3-ஹைட்ராக்சிபியூட்டைரேட் (PHB),பாலிஹைட்ராக்சிவலேரட் மற்றும் பாலிஹைட்ராக்சிஹெசானோட்(PHH) பாலிலாக்டிக் அமிலம்(PLA) முதலியவை ஆகும். பாலிலாக்டிக் அமிலம் (PLA) கரும்பு சர்க்கரை அல்லது குளுக்கோஸ்ஸில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு ஒளி புகவல்ல நெகிழியாகும் அதன் பண்புகள் வழக்கமான பெட்ரோகெமிக்கலில் இருந்து பெறப்படும் நெகிழியை(பி இ அல்லது பிபி போன்ற) ஒத்திருக்கிறது, ஆனால் அது ஏற்கனவே வழக்கமான நெகிழி உற்பத்திக்கு பயன்படும் தரமான உபகரணங்கள் கொண்டு எளிதில் உற்பத்தி செய்ய முடியும்.இதன் உற்பத்தி செலவுகள் அதிகமாகும். பி எல் எ மற்றும் பி எல் எ கலைவைகள்,பொதுவாக பல்வேறு பண்புகளையுடைய சிறு மணிகளின் வடிவில் இருக்கும் .இந்த கலப்புகள் படலம், அச்சுகள், கோப்பைகள் மற்றும் பாட்டில்கள் உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பி எல் எ பொருள்கள் அதிக வளர்ச்சி திறனை உடையவை என்றாலும் வழக்கமான நெகிழிகளின் உற்பத்தி செலவுகளை காட்டிலும் அதிகம் என்பதால் அதன் வளர்சசியை அது பாதிக்கிறது. பாலி-3-ஹைட்ராக்சிபியூட்டைரேட்உயிரி பலபடிச்சேர்மங்கள் பாலி-3-ஹைட்ராக்சிபியூட்டைரேட்(PHB) குளுக்கோஸ், சோள மாவு கழிவுநீர் இவற்றின் மீது நுண்ணுயிரிகள் செயல்படுத்துவதால் உருவாகப்படும் ஒரு வகை பாலியஸ்டர்யாகும்.[6][7] அதன் பண்புகள் பெட்ரோலிய நெகிழி பாலிபுராப்லினை ஒத்ததாக இருக்கும். தென் அமெரிக்கா சர்க்கரை ஆலை PHB உற்பத்தியை ஒரு தொழில்துறை அளவிற்கு விரிவாக்க முடிவு செய்துள்ளது. PHB அதன் இயற்பியல் பண்புகளால் வேறுபடுகின்றது. ஒளிபுகும் தன்மையும் 130 டிகிரி செல்சியஸ்விட அதிகமான உருகுநிலையும் மற்றும் எச்சம் இல்லாமல் மக்கும் இயல்பையும் உடையது. பாலி ஹைட்ரோக்சி அல்கோநேட்ஸ்சர்க்கரை அல்லது லிப்பிட்களின் மேல் நுண்ணுயிரிகள் வினை புரிவதால் ஏற்படும் நொதித்தல் மூலம் நேரியல் பாலியஸ்டர்களாகிய பாலிஹைட்ரோக்சி அல்கோநேட்ஸ் இயல்பாக உற்பத்தி செய்யபடுகிறது. அவை கரிமம் மற்றும் ஆற்றல் சேமிக்க நுண்ணுயிரிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. நுண்ணுயிரிகள் வினை புரிந்து சர்க்கரை நொதித்தல் ஏற்படுவதற்கான நிலைமைகள் உகந்ததாய் உருவாக்குவதன் மூலம் தொழில்துறையில் பாலியஸ்டர் சுத்திகரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. 150க்கும் அதிகமான வெவ்வேறு மோனமர்களை இவற்றோடு இணைத்து மிகவும் வேறுபட்ட பண்புகளை கொண்ட பொருட்களை உருவாக்கலாம். இந்த வகை நெகிழிகள் அதிகம் நீளும் தன்மையும் குறைவான நெகிழ்வு தன்மையும் மற்றும் மக்கும் திறனும் உடையது. இந்த நெகிழிகள் மருத்துவ துறையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பாலிஅமைடு 11 (PA 11)பாலி அமைடு 11 இயற்கை எண்ணெயில் இருந்து பெறப்பட்ட ஒரு உயிர்ம பலப்படி சேர்மமாகும். இது தொழில் ரீதியாக ரில்சன் பி என்ற பெயரில் அர்கீமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிஅ 11 தொழில்நுட்ப பாலிமர்கள் குடும்பத்தை சேர்ந்தது மற்றும் மக்கும் திறன் கொண்டதில்லை. அதன் பண்புகள் பி அ 12 யை ஒத்தனவை என்றாலும் பச்சையக வாயுக்களின் வெளியேற்றம் குறைவாக இருப்பதோடு அதன் உற்பத்தியில் புதுப்பிக்க இயலாத மூலங்களின் பயன்பாடு குறைவாக இருக்கும். வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனில் பிஅ 12 யை விட மேன்மையானது. இது வாகன எரிபொருள் குழாய்கள், காற்றியக்கு நிறுத்தல் கருவியின் குழாய், மின் கம்பி, கரையான் எதிர்ப்பு உறைகள், நெகிழ்வு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், கட்டுப்பாடு திரவ குழாய்கள், விளையாட்டு காலணிகள், மின்னணு சாதன பொருட்கள், மற்றும் வடிகுழாய்கள் போன்ற உயர் செயல்திறன் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு எண்ணெயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இகோ பாக்ஸ் என்ற வணிக பெயரில் டிஎஸ்எமினால் விற்பனை செய்யப்படுவது பி எ 410 என்ற நெகிழியாகும். பி அ 410 ஒரு உயர் உருகுநிலை கொண்ட உயர் செயல்திறன் அமைடு ஆகும். பல்வேறு இரசாயன பொருட்களுக்கு எதிர்ப்பு, குறைந்த ஈரப்பதம் உறிஞ்சுதல் முதலியவையே இதன் செயல் திறனுக்கு காரணம்.[8] உயிர் பொருட்களிலுருந்து பெறப்பட்ட பாலியெத்திலின்பாலியெத்திலின் அடிப்படை கட்டுமான தொகுதி (மோனமர்) எத்திலீன் ஆகும். இது கரும்பு அல்லது சோளம் போன்ற விவசாய மூலப்பொருள்களின் நொதித்தல் முறையில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் இருந்து ஒரு சிறிய இரசாயனவினையின் மூலம் உற்பத்தி செய்யப்படும். உயிர்பொருட்களிலுருந்து பெறப்பட்ட பாலியெத்திலின் பாரம்பரிய பாலியெத்திலின் வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகளை கொண்டது. அவை மக்கும் தன்மை கொண்டதில்லை ஆனால் மறுசுழற்சி செய்ய முடியும். இது கணிசமாக பச்சையக வாயு உமிழ்வுகள் குறைக்கின்றது. உயிர்பொருட்களில் இருந்து பெறப்படும் உயர் அடர்த்தி பாலியெத்திலின் வணிக அளவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ப்ரச்கெம் நிறுவனம். இது பாட்டில்கள் மற்றும் தொட்டிகளையும் செய்ய பயன்படுகிறது. மற்றும், உயிர்பொருட்களில் இருந்து பெறப்பட்ட பியூட்ரின் உற்பத்தி தொழில்நுட்பம் நேரியல் குறைந்த அடர்த்தி பாலியெத்திலின் வகைகளை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது திரைப்பட தயாரிப்பில் பயன்படுகிறது.[9] மரபணு மாற்றப்பட்ட உயிர்நெகிழிகள்மரபணு மாற்றம் (GM) உயிர்நெகிழி தொழில் துறைக்கு ஒரு சவாலாக உள்ளது. தற்போது கிடைக்கும் முதல் தலைமுறை பொருட்களாக கருதப்படும் உயிர்நெகிழிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை மூலப் பொருளாகப் பயன்படுத்துவதில்லை. எதிகால தொழில்நுட்பங்கள் இரண்டாம் தலைமுறை உயிர்நெகிழிகளை உற்பத்தி செய்ய மேன் மேலும் திறன் மேம்படுத்த மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அல்லது மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகளை பயன்படுத்தி "தாவர தொழிற்சாலை" மாதிரியை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் விளைவு![]() ![]() ![]() பெட்ரோலிய நெகிழிகளோடு ஒப்பிடும் போது உயிர் நெகிழிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடு பொதுவாக ஒரு நிலையான செயல்முறையாகும். இது கரிம மற்றும் படிம எரிபொருளை குறைவாக சார்ந்திருக்கிறது. அவை மக்கும் போது குறைவான பச்சையக வாயுக்களை வெளியிடுகிறது. அவை எண்ணெயில் இருந்து பெறப்பட்ட நெகிழிகளின் அபாயகரமான கழிவுகளை குறைப்பதோடு உறைகள் தயாரிப்பில் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வந்துள்ளது.[10] எனினும் உயிர்மநெகிழி பொருட்களின் உற்பத்தி ஆற்றலுக்காகவும் மூலப்பொருளுக்காகவும் பெட்ரோலியத்தையே நம்பி இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்த முடியும் என்றாலும் பண்ணை இயந்திரங்கள் இயக்கவும், தாவரங்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சவும், உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் உற்பத்தி செய்யவும், மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து, மூலப்பொருட்கள் செயல்ப்படுத்துதல் மற்றும் இறுதியில் உயிர்மநெகிழி உருவாக்குதல் ஆகிய அனைத்து செயல்முறைகளுக்கு பெட்ரோலிய பொருட்களை சார்ந்து இருக்கிறோம். இத்தாலிய உயிர்மநெகிழி[11] உற்பத்தியாளர் நோவோமோன்ட் சுற்றுச்சூழல் பற்றிய தனது தணிக்கையில்[12] மாவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ நெகிழி உற்பத்தி செய்ய பெட்ரோலியம் 500 கிராம் மற்றும் ஒரு பாரம்பரிய பாலியெத்திலின் பாலிமர் உற்பத்தி செய்ய தேவைப்படும் ஆற்றலில் கிட்டத்தட்ட 80% தேவைப்படுகிறது என்று கூறுகிறார். நேச்சர் வொர்க்ஸ் என்னும் உயிர்மநெகிழி பாலி லாக்டிக் அமிலத்தின் ஒரே வர்த்தக உற்பத்தியாளர் இந்த உயிர்ம பிளாஸ்டிக்கை பாலியெத்திலினுடன் ஒப்பிடுகையில் 25 முதல் 68 சதவீதம் புதைபடிவ எரிபொருள் சேமிப்பாகிறது என்று கூறுகிறார்.ref>[2] பரணிடப்பட்டது 2008-12-17 at the வந்தவழி இயந்திரம்</ref>[13] இது அவரது தொழிற்சாலைக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ் வாங்குவதற்காகவும் இருக்கலாம். பாரம்பரிய நெகிழிகள் மற்றும உயிர்ம நெகிழிகள் பலத் தரப்பட உறைகள் செய்ய பயன்படுகின்றன. இவற்றை பற்றி நடத்திய ஆய்வின் முடிவுகளை அதீனா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விரிவான ஆய்வின் படி சில பொருட்களை குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பும், வேறு சில அதிக சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்துகின்றன. இந்த ஆய்வு நெகிழிகள் மக்கும் போது வெளியாகும் மீத்தேன் வாயுவை புறக்கணிக்கிறது.[14] உயிர்ம நெகிழிகள் குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன என்றாலும், திறம்பட நிர்வகிக்க முடியாத ஒரு உலக பொருளாதாரம் மற்றும் அதிக காடழிப்பிற்கும் காரணமாகலாம். நீர் மற்றும் மண் அரிப்பு முதலியவற்றின் மீது தாக்கம் ஏற்படுத்தலாம. பிற ஆய்வுகள் உயிர்ம நெகிழிகள் கரியமில தடத்தை 42% குறைப்பதைக் காட்டுகின்றன.[15] உயிர்ம நெகிழியை விவசாய துணை பொருள்களில் இருந்தும் மற்றும் நுண்ணுயிர்கள் பயன்படுத்தியும் உற்பத்தி செய்யலாம்.[16] உயிர்ம நெகிழிகள் சிதைவுறுதல்![]() உயிர்ம நெகிழி துறையில் சில நேரங்களில் சொற்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தொழில்துறையில் உயிர்மநெகிழி உயிரியல் மூலபொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நெகிழிகளை குறிக்கும். அனைத்து (உயிர் மற்றும் பெட்ரோலிய மூலப்பொருள்) நெகிழிகள் பொருத்தமான சூழலில் நுண்ணுயிரிகளின் வினையால் தரமிழக்கின்றன. அதாவது தொழில்நுட்ப ரீதியாக அவை மக்கும் பொருட்களாகும். இருப்பினும் மிகவும் மெதுவாக மக்குவதால் அவை மக்கா பொருட்களாகவே கருதப்படுகின்றன. சில பெட்ரோலிய அடிப்படையிலான நெகிழிகள் மக்கும் திறன் உடையனவாக கருதப்படுகின்றன. அவை உயிர்ம நெகிழிகளின் திறனை மேம்படுத்த ஒரு சேர்க்கைபொருளாகப் பயன்படுத்தப்படும். மக்காத உயிர்ம நெகிழிகள் நீடித்து உழைக்கக் கூடியவை. சிதைவுறம் அளவு, வெப்பநிலை, பாலிமர் நிலைத்தன்மை மற்றும் பிராணவாயுவின் அளவு முதலிவற்றை கொண்டு மாறுபடும். இதன் விளைவாக உயிர்மநெகிழிகள் தொழில்துறை அமைப்புகளில் மட்டுமே இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சிதைக்கப்படுகின்றன. மாவுமூலப்பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நெகிழிகள் மட்டுமே சிதையும். எவ்வளவு விரைவாக எந்த அளவிற்கு நெகிழி சிதைவடைகிறது என்பதற்கான அளவுகோற்களை ஐரோப்பிய நிலையான EN13432 வரையறுக்கிறது. இதை தரநிர்ணய ஐஎஸ்ஓ சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது. ஐரோப்பா, ஜப்பான் அமெரிக்க உட்பட பல நாடுகள் இதை அங்கிகரித்துள்ளன. எனினும் இது 140F அல்லது அதற்கும் மேலான தட்பவெட்பங்களில் தொழில்துறை உரமாக்கல் அமைப்புகளுக்கு மட்டுமே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உரமாக்கல் நிலைமைகளுக்கு இது பொருந்தாது. "மக்கும் நெகிழி" என்பது பெட்ரோலிய அடிப்படையிலான மாற்றம் செய்யப்பட்ட உயிர் நெகிழிகளை குறிக்கும்.[17] பாலியெத்திலின் போன்ற பாரம்பரிய நெகிழிகள் புற ஊதா (UV) ஒளி மற்றும் பிராணவாயு மூலம் சிதைவடைகின்றன. இதை தடுக்க உற்பத்தியாளர்கள் நிலையான இரசாயன பொருள்களை சேர்க்கின்றனர். எனினும் நெகிழியின் சிதைவை ஊக்குவிக்கும் இரசாயனத்தை சேர்ப்பதன் மூலம் புற ஊதா மற்றும் பிராணவாயு மூலம் ஏற்படும் கட்டுப்பாடான சிதைவை ஏற்படுத்தலாம். இந்த செயல்முறை நுண்ணுயிர்கள் அல்லாத நடவடிக்கைகளினால் ஏற்படுவதனால் இதை ஆக்சி சிதைவு நெகிழி மற்றும் போட்டோ சிதைவு நெகிழி என்று அழைக்கப்படுகின்றன. சில மக்கும் நெகிழி உற்பத்தியாளர்கள் தங்கள் நெகிழி பொருட்கள் நுண்ணுயிரிகளால் தாக்கப்படும் என்று வாதிட்டாலும், அவை மக்கும் பொருட்களுக்கான EN13432 வரையறைகளை பூர்த்தி செய்யவில்லை. உயிர்மநெகிழி தொழில்நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை சங்கங்கள் ஆக்சோ-மக்கும் நெகிழிகள் வரையறுக்கப்பட தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சித்துள்ளனர். ஆக்சி மக்கும் நெகிழிகள் "ஆக்சோஸ்" என்று அழைக்கப்படும் -சிதைவு தொடங்க சில கூடுதல் இரசாயன பொருள்கள் சேர்க்கப்பட்ட பெட்ரோலிய அடிப்படையிலான நெகிழிகள் இவை. ஆக்சோ தயாரிப்பாளர்கள் பயன்படுத்தப்படும் (எஎஸ்டிஎம்) தரநிலை ஒரு வழிகாட்டி மட்டுமே ஆகும். இதற்கு 60% சிதைவுறதல் மட்டுமே தேவைப்படுகிறது பிலயிப் என்னும் ஆக்சி நெகிழி மண்ணில் 23 டிகிரி வெப்பநிலையில் 66% வரை, 545 நாட்களில் சிதைவடையும். மறுசுழற்சி செய்தல்உயிர் நெகிழிகள் தற்போது இருக்கும் மறுசுழற்சி திட்டங்களை சேதப்படுத்துமோ என்று கவலைஎழுந்துள்ளது. அதிக அடர்த்தி பாலிஎதிலீன் பால் பாட்டில்கள் மற்றும் பிஇடி தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் பாட்டில்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள கூடியவை. எனவே எளிதில் வெற்றிகரமாக உலகின் பல பகுதிகளில் மறுசுழற்சி செய்யபடுகின்றன. அனைத்து நெகிழிகளில் 27% மட்டுமே மறுசுழற்சி செய்யபடுகின்றன. மீதமுள்ள நெகிழிகள் நிலக்குப்பைகளாகவும் மற்றும் சமுத்திரங்களிலும் உள்ளன. எனினும், பிஇடி போன்ற நெகிழிகளையும் உயிர் நெகிழிகளையும் நுகர்வோர் வேறுபடுத்த தவறும் பட்சத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத பிஇடியை விளைவிக்கின்றது.[18] The rest are in landfills and oceans.[19] இந்த பிரச்சனையை தனித்துவமான பாட்டில் வகைகள் மூலமும் பொருத்தமான வரிசையாக்கும் தொழில்நுட்பங்கள் மூலமும் சமாளிக்க முடியும். எனினும் முதல் வழி நம்பகமானது இல்லை. இரண்டாவது வழி அதிக செலவாகும். சந்தைபலதரப்பட்ட சந்தையினாலும் மற்றும் தெளிவற்ற வரையறைகளினாலும் உயிர்நெகிழிகளின் மொத்த சந்தை அளவை விவரிப்பது கடினம். ஆனால் மதிப்பீடுகள் படி உலக உற்பத்தித்திறன் 327.000 டன்கள் ஆகும். மாறாக அனைத்து நெகிழும் பொருட்களின் உலக நுகர்வு 12.3 மில்லியன் டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[20] In contrast, global consumption of all flexible packaging is estimated at around 12.3 million tonnes.[21] கோப்பா (ஐரோப்பியவிவசாய ஒன்றியம்அமைப்பின் குழு) மற்றும் COGEGA (ஐரோப்பிய விவசாயஒன்றியம் கூட்டுறவு பொது குழு) ஐரோப்பிய பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் உயிர்நெகிழிகளின் சாத்தியமான ஆற்றலை பற்றி ஒரு மதிப்பீடு செய்துள்ளது:
இதுவரை உயிர்நெகிழிகளின் மூன்று முக்கிய மூலப்பொருட்கள் ஸ்டார்ச், சர்க்கரை, மற்றும் செல்லுலோஸ் முதலியவற்றின் உலகளாவிய நுகர்வு 2000, 2008 ஆண்டுகளில் 600% அதிகரித்துள்ளது.[22] என் என்எப்சிசி உலக வருடாந்திர திறன் 2013க்குள் ஆறு மடங்கு அதிகமாக வளரும் என்று கணித்துள்ளது. பிசிசி ஆராய்ச்சியின் படி மக்கும் பாலிமர்கள் 2012 யில் சராசரி வளர்ச்சி 17 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளர்கள். அப்படி இருந்தும் உயிர்நெகிழிகள் உலகின் ஒட்டுமொத்த நெகிழிச்சந்தையில் ஒரு சிறிய அளவேயாகும். 2010யில் 500 பில்லியன் பவுண்டுகள் (220 மில்லியன் டன்) அடைந்துள்ளது. செலவுசெல்லுலோஸ் தவிர, பெரும்பாலான உயிர்மநெகிழி தொழில்நுட்பங்கள் புதியது என்பதால் பெட்ரோலிய நெகிழிகளுடன் போட்டியிட இயலாது. உயிர்ம நெகிழிகளை இன்னும் பெட்ரோலிய அடிப்படையிலான நெகிழிகளை விட குறைவான செலவில் உற்பத்திசெய்ய இயலவில்லை. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு![]()
சோதனை நடைமுறைகள்![]() EN 13432 சர்வதேச அளவில் தொழில்துறை தரங்களை நிர்ணயிக்கிறது. ஒரு பொருள் ஐரோப்பிய சந்தையில் மக்கும் தன்மையுடையது என்று கூறிக்கொள்ள வேண்டும் என்றால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு இணங்க வேண்டும். சுருக்கமாக, 90 நாட்களுக்குள் ஒரு ஆய்வகத்தில் இந்த பொருட்கள் 90% சிதைவுற வேண்டும். ASTM 6400 அமெரிக்காவின் தரக் கட்டுப்பாட்டு கட்டமைப்பு மொனொமர் அல்லாதவற்றிற்கு 180 நாட்களுக்குள் 60% சிதைவுற வேண்டும் என்று நிர்யணித்துள்ளது. பல மாவு பொருள் சார்ந்த நெகிழிகள் பிஎல்எ சார்ந்த நெகிழிகள் மற்றும் சில சக்சினட்ஸ் அடிபேட்ஸ் போன்ற இணை பாலியஸ்டர்கள் இந்த சான்றிதழ்களை பெற்றுள்ளன. ஒளியினால் மக்கும் அல்லது ஆக்சோ உயிர்நெகிழிகள் என விற்கப்படும் சேர்க்கை சார்ந்த உயிர்நெகிழிகள் தற்போதைய வடிவில் இந்த தரத்திற்குள் இணங்கவில்லை. கலப்பு உரமாக்குதல் - ASTM D6002ஒரு நெகிழியின் கலப்பு உரமாகும் தரத்தை தீர்மானிப்பதற்கான ASTM D6002 பின்வருமாறு கலப்பு உரமாமதல் என்ற வார்த்தையை விளக்குகிறது. "எந்த பொருள் கலப்பு பொருட்களுக்கு ஏற்ப உயிரியல் சிதைவுக்கு உட்பட்டு கரியமிலவாயு, நீர், கனிம சேர்மங்கள் மற்றும் உயிரிதிரளாக சிதைவடைகின்றதொ அவை கலப்பு உரமாகும்" இந்த விளக்கம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. பாரம்பரிய "உரமாக்கல்" என்பதன் இறுதி பொருள் மக்கிய கூழ்மமாகும். "உரமாக்கல்" என்னும் சொல்லின் விளக்கமும் தற்போதைய விளக்கமும் முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது. ASTM D6002வினை திரும்பப் பெறுதல்ஜனவரி 2011 இல், ASTM D6002 என்ற கலப்பு நெகிழிகளுக்கான சட்ட நம்பகத்தன்மையை குறிக்கும் அடையாளத்தை திரும்பப்பெற்றது. அதன் விளக்கம் பின்வருமாறு : இது சுற்று சூழலில் மக்கும் நெகிழிகளின் கலப்பு உரமாகும் தன்மை ஆகியவற்றை பற்றிய ஒரு வழிகாட்டியாகும்.[25] ASTM இதை இன்னும் மாற்றி அமைக்கவில்லை உயிரியல் அடிப்படையிலான - ASTM D6866ASTM D6866 உயிரியல் முறையில் தயாரிக்கப்பட்ட உயிர் நெகிழிகளுக்கு சான்றளிக்க உருவாக்கப்பட்டது. வளிமண்டலத்தில் உள்ள காஸ்மிக் கதிர்கள் கரிம அணுக்களை கதிரியக்க ஐசோடோப்பு கரிமம் -14ஆக மாற்றும். வளிமண்டலத்தில் இருக்கும் கரியமிலவாயுவை ஒளிச்சேர்க்கைகாக தாவரங்கள் பயன்படுத்துகின்றன எனவே தாவரங்களில் புதிய கார்பன்-14 மற்றும் கார்பன்-12 ஆகிய இரண்டும் இருக்கும். 100,000 ஆண்டுகளுக்கு பிறகு கார்பன்-14 கதிரியக்கங்கள் நீங்கி கார்பன்-12 கரிம பொருள் மட்டுமே எஞ்சியிருக்கும். பெட்ரோ பொருட்கலில் இருந்து செய்யப்பட்ட பொருட்களில் கார்பன்-14 இருக்காது. அதே சமயம் உயிரி பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட தயாரிப்புக்களில், கார்பன்-14 அதிகம் இருக்கும். ஒரு பொருளில்(திட அல்லது திரவ) புதுப்பிக்கத்தக்க கரிமபொருளின் சதவீதத்தை எளிதாக அளவிட முடியும்.[26][27] உயிரியல் சிதைவிற்கும் உயிரியல் உள்ளடக்கத்திற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. ஒரு உயர் அடர்த்தி பாலியெத்திலின் (ஹெச்டிபிஇ) என்னும் உயிர்மபிளாஸ்டிக் 100% உயிரியல் அடிப்படை கொண்டிருக்கும்[28](அதாவது 100% புதுப்பிக்கத்தக்க கார்பன் கொண்டிருக்கும்)ஆனால் மக்கும் திறன் இல்லாது இருக்கும். இந்த ஹெச்டிபிஇ போன்ற உயிர்ம நெகிழிகள் ஆற்றல் உற்பத்திக்காக எரிக்கப்படும் போது குறைவான பச்சையக வாயுவை வெளியிடுகின்றன. அவற்றின் மூலக்கூறு உயிரிப் பொருள் என்பதால் இந்த உயிர் நெகிழிகள் கார்பன்- நடுநிலையாக கருதப்படுகிறது. சட்ட ரீதியான விளைவுகள்2012ல் வெர்மான்ட் அட்டர்னி ஜெனரல் ஒரு பிபிஐ சான்றிதழ் பெற்ற பொருள் "கலப்பு நெகிழி" என்று பொய்யாக கூறியமைக்காக வழக்கு தொடர்ந்தார். தொழில்துறை உரமாக்கல் வசதிகள் பிபிஐயில் இருக்கின்றன என்ற கூற்று பரிசோதனை மூலம் பொய் என்று கண்டறியப்பட்டது.[29] சுற்று சூழல் பாதிப்புஅக்டோபர் 21, 2010 அன்று, விஞ்ஞானிகள் குழு மக்காச் சோளத்திலிருந்து செய்யப்பட்ட உயிர்மநெகிழிகளை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, உயர் அடர்த்தி மற்றும் குறைவான அடர்த்தி பாலிஎதிலான் மற்றும் பிபி போன்ற நெகிழிகளை விட அதிக சுற்றுச்சூழல் குறைபாடுகளை ஏற்படுத்தின சோளம் அடிப்படையிலான நெகிழிகள் என்று கண்டுள்ளனர். புற்றுநோய் காரணிகள், அமிலமாதல், சூழல் நச்சுகள், ஓசோன் இழப்பு, சுவாச விளைவுகள், மற்றும் பனிப்புகை முதலியவற்றை செயற்கை நெகிழிகளை விட அதிகமாக உருவாக்கின்றன சோளம் அடிப்படையிலான நெகிழிகள்.[30] அமெரிக்க கரிம பதிவின் ஆய்வின் படிசோளம் விளைச்சல் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு பூச்சிக்கொல்லிகள் விட 310 மடங்கு அதிகம் நச்சுத் தன்மை வாய்ந்தது.[31] குறிப்புகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia