எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு
இரண்டாம் பிலிப்பு (Philip II, எசுப்பானியம்: Felipe II «el Prudente»; 21 மே 1527 – 13 செப்டம்பர் 1598) எசுப்பானியாவின் அரசராக[1] 1556 முதல் ஆட்சி புரிந்தவர். தவிரவும் 1581 முதல் போர்த்துக்கல் அரசராகவும் ( பிலிப்பு I ஆக) 1554 முதல் நாபொலி, சிசிலி அரசராகவும் மிலன் பிரபுவாகவும் விளங்கினார். அரசி முதலாம் மேரியுடன் திருமணமான காலத்தில் (1554–58), இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசராகவும் இருந்தார்.[2][3] 1555இலிருந்து நெதர்லாந்தின் 17 மாநிலங்களுக்கு பிரபுவாக இருந்தார். எசுப்பானியத்தில் "விவேகமுள்ள பிலிப்பு" (பெலிப்பு எல் புருடென்ட்) என்று அழைக்கப்பட்டார். இவரது காலத்தில் பேரரசு அப்போது ஐரோப்பியர்கள் அறிந்திருந்த அனைத்துக் கண்டங்களிலும் பரவியிருந்தது. இவரது நினைவாக பெயரிடப்பட்ட பிலிப்பீன்சு தீவுகளும் பேரரசில் அடங்கியிருந்தது. இவரது ஆட்சிக்காலத்திலேயே எசுப்பானியா அதிகாரத்திலும் தாக்கத்திலும் தனது உச்சநிலையை எட்டியது. இது சிலநேரங்களில் பொற்காலம் எனப்படுகின்றது. "சூரியன் மறையாத பேரரசு" என்ற சொலவடை இவரது ஆட்சிக்காலத்தில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் தனித்தனியே 1557, 1560, 1569, 1575, மற்றும் 1596 ஆண்டுகளில் அரசு திவாலானது. 1581 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு விடுதலை வழங்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கத்தோலிக்கரான பிலிப்பு சீர்திருத்தத் திருச்சபை சேர்ந்த இங்கிலாந்து மீது 1588 இல் பல கடற்படையெடுப்புக்களை எடுத்து தோல்வியுற்றார்; இத்தோல்விகள் பெரும்பாலும் புயல்களாலும் கட்டமைப்புச் சீர்கேடுகளாலும் ஏற்பட்டன. ஆட்சிப்பரப்புகள்![]() ![]() மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia