எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு
எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு (Ethyl bromodifluoroacetate) என்பது C4H5BrF2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியலில் இது ஓர் எசுத்தர் சேர்மம் என்று வகைப்படுத்தப்படுகிறது. வேதிச் சேர்மங்களை தயாரிக்கும்போது அவற்றில் CF2 குழுவை அறிமுகப்படுத்த இச்சேர்மம் பயன்படுகிறது. எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு தெளிவான மஞ்சள் நிற திரவமாகும். புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டும் எத்தில் ஆல்ககாலும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எத்தில் புளோரோசல்போனாக்சியிருபுளோரோ அசிட்டேட்டு சோடியம் புரோமைடுடன் (NaBr) வினைபுரிந்து எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டை உருவாக்குகிறது. இந்த வினை கரைப்பான் சல்போலேனில் நிகழலாம். வினைகள் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் 12 மணிநேரம் நிகழும். இவ்வினையில் 31% வினைவிளை பொருள்கள் உருவாகும். வினைகள்ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களை இரெபார்மாட்சுகி வினையாக்கியைப் பயன்படுத்தி எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு மற்றும் CF2 குழுவை கொண்ட மற்ற ஒத்த சேர்மங்கள் உருவாக்கலாம். 2,2-இருபுளூரோ-3-ஐதராக்சி எசுத்தர்களையும் எத்தில் புரோமோயிருபுளோரோ அசிட்டேட்டு அளிக்கிறது. மேலும் எத்தில் புரோமோபுளூரோஅசிட்டேட்டு சேர்மங்களை உருவாக்குவதற்கும், லாக்டோன்கள், இமைன்கள் மற்றும் பிற அமினோ அமிலங்கள் போன்ற பிற கரிம சேர்மங்களுடன் சோதனை செய்வதற்கும் இது ஒரு நல்ல சேர்மமாக கருதப்படுகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia