எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட்
பிரான்சிஸ் ஸ்காட் கீ பிட்ஸ்ஜெரால்ட் (Francis Scott Key Fitzgerald, செப்டம்பர் 24, 1896 – திசம்பர் 21, 1940) இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும்[1] ஓர் அமெரிக்க எழுத்தாளர். இவரது புதினங்களும் சிறுகதைகளும் ஜாஸ் காலம் என்று அவரழைத்த நவீனத்துவப் பாணியில் அமைந்திருந்தன. முதலாம் உலகப் போரின்போது ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்த அமெரிக்க எழுத்தாளர்களைக் குறிக்கும் 1920களின் தொலைந்த தலைமுறை (Lost Generation) உறுப்பினரும் ஆவார். தமது வாழ்நாளில் திஸ் சைட் ஆஃப் பாரடைஸ், த பியூட்டிபுல் அண்ட் டாம்(ன்ட்), டெண்டர் இஸ் த நைட் மற்றும் அவரது புகழ்பெற்ற த கிரேட் கேட்ஸ்பி என்ற நான்கு புதினங்களை எழுதினார். அவரது முடிவுறாத புதினம் த லவ் ஆஃப் த லாஸ்ட் டைகூன் அவரது மறைவிற்குப் பின்னர் வெளியானது. இவற்றைத் தவிர பிட்ஸ்ஜெரால்ட் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது புதினங்கள் த கிரேட் கேட்ஸ்பியும் டெண்டர் இஸ் த நைட்டும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. மேலும் 1937 முதல் 1940 வரையிலான இவரது வாழ்க்கையும் பிலவ்டு இன்பிடெல் என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia