எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் பலகை

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்[1] என்பது எம்.ஜி.ஆரால் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாக செயற்படுத்தப்பட்டது. அதன்பின்பு அரசுகள் மாறினாலும் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. [2]

திட்டத்தின் மூலம்

தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிர மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்தார். உடனே அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட கல்வி அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார்.[3]

செயல்பாடுகள்

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 2 வயது முதல் 5 வயது வரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, 5 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி (அரசு பள்ளி மற்றம் அரசு உதவி பெறும் பள்ளி) மாணவ மாணவியர்களுக்கும் சத்துணவு வழங்குதல். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலத்தையும் சத்துணவு பெறும் நிலைமையையும் நன்கு பாதுகாத்து, அவர்களது உடல் மற்றும் ஆற்றலை வளர்த்தல் போன்ற கொள்கைகளுடன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பள்ளியில் சத்துணவுத் திட்ட மையம் தொடங்க குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருக்க வேண்டும்.

பெயர் மாற்ற சர்ச்சை

2006-11 திமுக ஆட்சி காலத்தில் ”எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்” என்ற பெயருக்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை அப்போதைய துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மறுத்தார். [4]

ஆதாரங்கள்

  1. அங்கன்வாடி மையங்களில் 13 வகை கலவை சாதம் வழங்கும் திட்டம் - தினமணி Mar 21, 2013
  2. https://web.archive.org/web/20160901092838/http://www.tn.gov.in/ta/go_view/dept/30?page=1
  3. தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்
  4. "இன்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே செயல்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ்தான், நிதி ஒதுக்கப்படுகிறது. 2009}2010}ம் நிதியாண்டில் அந்தத் தலைப்பின் கீழ் வரவு செலவு விவரங்கள் உள்ளன " தினமணி செய்தி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya