எய்யாபியாட்லயாகுட் எரிமலை
எய்யாபியாட்லயாகுட், (ஒலிப்புதவி - ஏபிசி நியூசு [1]) ஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிகை ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும்.இந்தப் பனியாறு 100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்டதாகும். மலையின் தெற்குமுனை முன்பு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடுத்திருந்தது. ஆனால் கடல் 5 கி.மீ வரை உள்வாங்கியதால் முன்பு கடற்கரையிருந்த இடத்தில் பல அழகிய அருவிகளைக் கொண்ட மலைமுகடுகள் காணக்கிடைக்கின்றன. ![]() எரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,மற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. [1] அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கி வருகின்றது. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். [2][3] ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பத்து,இருபது மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்துள்ளது. இதன் எரிமலை வெடிப்புத்தன்மை எண் (Volcanic Explosivity Index - VEI )நான்கு என கண்டறியப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia