எரிதழல் மலை![]() எரிதழல் மலைகள் (Flaming Mountains; சீனம்: 火焰山; பின்யின்: huǒyànshān) அல்லது கோச்சாங் மலைகள் (Gaochang Mountains) என்பன சீனாவில் சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தியான்சன் மலைத்தொடர்களில் உள்ள மண் அரித்துச் செல்லப்பட்ட, தரிசாக உள்ள சிவப்பு மணற்கற்கள் கொண்ட மலைகள் ஆகும். இவை வடக்கில் தக்கிலமாக்கான்பாலைவனத்திற்கும் கிழக்கில் துருப்பன் நகருக்குமிடையே பரவியுள்ள மலைகளாகும். சிவப்பு மணற்பாறைப்படுகைகளில் எற்பட்டுள்ள மண்ணரிப்பு மற்றும் இடுக்குகளின் காரணமாக இம்மலையானது எரிதழல் போல் தோற்றமளிக்கிறது. இம்மலையானது கிழக்கு மேற்காக சுமார் 100 கிலோமீட்டர்கள் (60 mi) நீளமும் 5–10 km (3–6 mi) அகலமும் கொண்டது. இதன் சராசரி உயரமானது 500 m (1,600 அடி) ஆகும். இதன் சில முகடுகள் 800 m (2,600 அடி)க்கும் மேலே அமைந்துள்ளன. இம்மலையை ஒட்டி சீனாவின் மிகப்பெரிய வெப்பநிலை அளக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது. மிக முக்கியச் சுற்றுலாத் தலமான இம்மலையைச் சுற்றியுள்ள வெப்பநிலை இதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இங்குச் சில புதைபடிவங்கள் காணப்படுகின்றன. பட்டுப்பாதை![]() ![]() பண்டைய காலத்தில் தென்கிழக்காசியாவிலிருந்து பட்டுப்பாதைக்குப் பயணித்த வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் மலைகளைத் தவிர்த்து மலைகளைக் கடந்து பாலைவனத்தை ஒட்டியுள்ள விளிம்புப் பாதைகளின் வழியாகவே பயணித்தனர். அவர்கள் எரிதழல் மலைகளின் அடிவாரத்தில் பாலைவனச் சோலை போன்ற நகரங்களில் ஓய்வுக்காகத் தங்கிப் பின்னர் தங்களது பயணங்களைத் தொடர்ந்தனர். இவர்களுடன் பௌத்த அமைப்புகளும் சேர்ந்து கொண்டன. அதனால் இப்பாதை ஒரு போக்குவரத்து நிறைந்த பன்னாட்டு வழித்தடமாக மாறியது. எனவே முக்கியமான சில மலையடிவாரக் கிராமங்கள் வர்த்தக மையங்களாக மாறின. மேலும் பௌத்த மடாலயங்களும் இப்பகுதியில் கட்டப்பட்டன. [1][2] பேசேகிளிக் ஆயிரம் புத்தர் குகைப் பாறைகள் இம்மலைப்பகுதியில் கோச்சாங்க் கணவாய்ப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்ட எழுபது பௌத்த குகைக்கோயில்கள் உள்ளன. மேலும் கௌதம புத்தரின் ஆயிரக்கணக்கான சுவரோவியங்களும் காணப்படுகின்றன.[3][4] இலக்கியப் புகழ்எரிதழல் மலைகளின் இப்பெயர் பெற்ற வரலாறு ஒரு பௌத்தத் துறவியின் கதையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு பௌத்தத் துறவியினால் இப்பெயரைப் பெற்றதாக 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன இலக்கியம் கூறுகிறது. பௌத்தத் துறவி மேற்கு நோக்கி இந்தியாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் மந்திர சக்திகள் நிறைந்த ஒரு குரங்குராஜா உடன் வந்தது. அக்குரங்கு உருவாக்கிய எரிகின்ற ஒரு சுவரைத் தாண்டித் தனது புனித யாத்திரையை அத்துறவி தொடந்தார் என மிங் அரச மரபு கால எழுத்தாளர் வூ செங் என்பார் எழுதிய 'மேற்கு நோக்கி ஒரு பயணம்' (Journey to the West) என்ற புதினத்தில் குறிப்பிட்டுள்ளார்.[5] இப்புதினத்தில் கி.பி. 627 இல் பௌத்த வேதங்களைப் பெறுவதற்காக இந்தியா சென்ற பௌத்தத் துறவி யுவான் சுவாங் கோச்சாங்கை விட்டு தியேன்சன் பகுதியிலுள்ள ஒருமலைக்கணவாய் வழியே சென்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[6] தொன்மவியல்சீனாவின் செவ்வியல் புதினமான மேற்கு நோக்கி ஒரு பயணம் (Journey to the West]] என்ற நூல் சுன் வூகாங் என்ற குரங்கு அரசர் சொர்க்கத்தில் இடையூறாக உருவாக்கப்பட்ட ஒரு நெருப்புச் சூளையைக் குத்தியதால் அதன் நெருப்புத்துண்டங்கள் வானத்திலிருந்து விழுந்த இடமே எரிதழல் மலையாக ஆனது எனக் குறிப்பிடுகிறது. உய்குர் தொன்மங்களின் படி தியேன்சன் மலையில் ஒரு டிராகன் வாழ்ந்து வந்தது. அது குழந்தைகளைப் பிடித்துத் தின்று வந்தது. உய்குர் வீரனொருவன் அந்த டிராகனை எட்டுத் துண்டங்களாக வெட்டினான். அதன் இரத்தம் பரவியதால் இவ்விடம் சிவப்பாகவும் அவன் வெட்டிய துண்டங்களே இங்குள்ள எட்டு பள்ளத்தாக்குகளாகவும் மாறியது என்று கருதப்படுகிறது..[7] காலநிலைமலையின் காலநிலையானது மிகவும் கடினமான காலநிலையாகும். கோடையில் சீனாவின் மிக அதிகமான வெப்பம் நிலவுமிடம் இதுவேயாகும். சுமார் 50 °C (122 °F) அல்லது அதற்கு மேலான வெப்பநிலை இங்கு நிலவுகிறது. 2008 கணக்கீட்டின்படி இங்கு 152.2 °F (66.8 °C) பதிவாகியுள்ளது.[8] மேற்கோள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia