எரியோகுரோம் பிளாக் டி (Eriochrome Black T) அணைவாக்கி தரம்பார்த்தலில் அணைவாக்கி நிறங்காட்டியாக பயன்படுகிறது. இது நீரின் கடினத்தன்மையை தீர்மானிக்கும் செயல்முறை ஆகும். இது ஒரு அசோ சாயம் ஆகும். எரியோகுரோம் என்பது ஹின்ஷ்மன் பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனத்தின் வணிகக் குறியீடு ஆகும். [1] ,
புரோட்டானேற்றம் அடைந்த எரியோகுரோம் பிளாக் டி நீலநிறமுடையது. கால்சியம், மெக்னீசியம், அல்லது வேறு உலோக அயனிகளுடன் அணைவை உருவாக்கும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது.
EBT pH 10 இடைநிலைக் கரைசலில் நீலமாக உள்ளது. இது Ca2+ மின்னணுக்களைச்(ions) சேர்க்கும்போது சிவப்பாக மாறுகிறது.
பயன்கள்
எத்திலீன்டையமீன்டெட்ராஅசிட்டிக் காடி தரம்பார்த்தலில் நிறங்காட்டியாக பயன்படுத்தும்போது போதுமான அளவு எத்திலீன்டையமீன்டெட்ராஅசிட்டிக் காடியைச் சேர்த்தவுடன் முடிவு புள்ளியில் நீல நிறம் தோன்றுகிறது. மேலும் இந்த எத்திலீன்டையமீன்டெட்ராஅசிட்டிக் காடி, உலோக அயனி நிறங்காட்டியுடன் சேர்ந்து கொடுக்கிணைப்பு சேர்மத்தை ஏற்படுத்தி விட்டு, கட்டற்றநிலை நிறங்காட்டியைக் விடுவிக்கிறது.
அருமண் பொன்மங்களைக் (metals) கண்டறிய எரியோகுரோம் பிளாக் டி பயன்படுகிறது.[2]
↑Dubenskaya, L. O.; Levitskaya, G. D. (1999). "Use of eriochrome black T for the polarographic determination of rare-earth metals". Journal of Analytical Chemistry. 54 (7): 655–657. ISSN 1061-9348.