எர்மெலோவின் ஆரஞ்சு
எர்மெலோவின் ஆரஞ்சு (Ermelo's Orange) என்பது போர்ச்சுகல் நாட்டின் வடக்கு மண்டலத்தில் உள்ள, வடகிழக்கு மலைகளின் மறுபக்கம் அல்லது உயர் மலைகளுக்குப் பின்னால் எனப் பொருளில் ஆல்தோ திராச-சு-மோன்ச்சசு என்று வழங்கப்படும் முன்னாள் துணை மண்டலத்தில் உள்ள மிராண்டா து தோரு நகரப்பகுதியில் இருந்து பெறப்படும் ஒரு ஆரஞ்சுப் பழவகையாகும். உள்ளூர் உணவுகளையும் பாரம்பரிய சமையல் முறைகளையும் ஊக்குவிக்கும் உலகளாவிய மெள் உணவு நிறுவனம், ஆர்க் ஆப் டேஸ்ட் (சுவையின் பேழை[தெளிவுபடுத்துக]) என்ற பெயரில் அருகிவரும் பாரம்பரிய உணவுகளைப் பன்னாட்டளவில் பட்டியலிடுகிறது. அந்த ஆர்க் ஆப் டேஸ்ட்டில் எர்மெலோவின் ஆரஞ்சுப் பழமும் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பழவகை, போர்ச்சுகலில் உள்ள ஆர்கோசு டி வால்டெவெசு நகராட்சியில் உள்ள ஒரு மறைவட்டமான 'எர்மெலோ' என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. இப்பழத்தினை இந்தப் பகுதிக்கு புனித ஆசிர்வாதப்பர் சபையிலிருந்து பிரிந்து வந்த சிசுடர்சியன்[யார்?] துறவிகள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினர். அப்பழங்கள் விதையற்றவை, சாறுமிக்கவை, மெல்லிய தோலுடையவை, இனிமையானவை.[1] பொதுவாக அவை இயற்கை வேளாண்மை முறையில் வளர்க்கப்படுகின்றன.[2][3] அவை ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றன.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia