எலிக்கடிக் காய்ச்சல்எலிக்கடிக் காய்ச்சல் (Rat-bite fever - RBF) அல்லது (Streptobacillary Fever) என்பது எலிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கடும் நோயாகும். இந்தக் காய்ச்சல் பாக்டீரியா (Bacteria) தொற்றுகளால் ஏற்படுகிறது. எலியின் சிறுநீர், சளி சுரப்புகளின் வழியான பாக்டீரியா தொற்றுகளால் மனிதர்களிடம் பரவும் அருகிய நோயாகும். எலிக்கடிக் காய்ச்சலுக்கான மாற்றுபெயர்களாக, இசுட்டிரெப்டோபாசில்லரி காய்ச்சல், இசுட்டிரெப்டோபாசில்லரி அழற்சி, இசுபைரில்லரிக் காய்ச்சல், முடவாத செந்தடிப்புத் தொற்று ஆகியன வழங்கப்படுகின்றன. பாக்டீரியாக்கள் தொற்றிய எலி கடித்தாலோ அல்லது மனித உடலில் ஏற்படும் வெட்டு அல்லது காயத்தாலோ இந்தக் காய்ச்சல் பரவும். இது இரண்டு வெவ்வேறு பாக்டீரியா வகைகளால் ஏற்படும் தொற்று நோய் ஆகும்.
சில நேர்வுகள் தொற்றடைந்த விலங்கின் சிறுநீர், சுரப்புகலுக்கு ஆட்பட்ட பிறகே கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சுரப்புகள் எலியின் வாய், மூக்கு, கண்களில் சுரப்பனவாகும்மானால், பெரும்பாலான நேர்வுகள் எலிக்கடியால் ஏற்படுகின்றன. எலிச் சிறுநீர், புழுக்கை மாசுற்ற உணவு, நீராலும் இக்காய்ச்சல் பரவுகிறது. இந்நோயால் அணில்கள், மரநாய்கள், மானெலிகள் போன்ற விலங்குகளையும் தாக்கும். வீட்டு நாய்கள், பூனைகள், தொற்றடையும்போது மாந்தருக்கும் பரவுகிறது. எலியால் கடிக்கப்பட்ட காயத்தை தொற்றுநீக்கக் கரைசலால் உடனே கழுவவேண்டும். பொதுஉலகம் முழுவதும் பல வகையான எலிகள் உள்ளன. உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பல்வேறு எலிக்கடி நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் கருப்பு எலி மற்றும் பழுப்பு எலி ஆகியவற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். எலிக்கடியினால் பல நோய்கள் பரவுகின்றன. அந்த நோய்களில் எலிக்கடிக் காய்ச்சலும் ஒன்று. நோய்க்குறிகளும் அறிகுறிகளும்இசுபைரில்லரி எலிக்கடிக்காய்ச்சலால் நிணநீர்க்கணுக்கள் வீங்கும். வழக்கமாக கழுத்து, இடுப்பு, கக்கம் ஆகிய இடங்களில் நிணநீர்க்கணுக்களில் வீக்கம் ஏற்படும் .[1] எலிக்கடிக் காய்ச்சலைக் கண்டறிதல்ஆய்வகச் சோதனைகளை நடத்துவதன் மூலம் எலிக்கடிச் காய்ச்சல் கண்டறியப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் இரத்த சோதனை மற்றும் திரவ சோதனைகள் மூலமாக பாக்டீரியா வகை அறியப் படுகிறது.[2] அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபரின் மூட்டுகள் மற்றும் நிணநீர் வழிகளில் அவரின் உடல் திரவங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. தவிர, அவசியமான இடங்களில், தோல் மற்றும் இரத்த எதிர்ப்பு உடல் சோதனைகளும் நடத்தப்படுகின்றன.[3][4] எலிக்கடிக் காய்ச்சல் தடுப்புஎலிக்கடிக் காய்ச்சலை எந்த சிகிச்சையும் இல்லாமல் குணப்படுத்த முடியும். ஆனால் அது அதிக நேரம் எடுக்கலாம். ஒரு வருடம் கூட பிடிக்கலாம். நீண்ட கால காய்ச்சல் என்றால் அது உடலின் மற்ற உறுப்புகளுக்குக் கடுமையான சேதங்களை விளைவிக்கும். அதனால் அவசர சிகிச்சையும் அளிக்கப்படலாம். எலிக்கடிக் காய்ச்சலை விரைவாகக் குணப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. மேற்கோள்கள்
மேல் தகவல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia