எலிசபெத் புர்ச்செனல்
எலிசபெத் புர்ச்செனல் (Elizabeth Burchenal) பிறப்பு:1875 அக்டோபர் 18 - இறப்பு: 1959 நவம்பர் 21) எனப்படும் இவர், ஓர் அமெரிக்க நாட்டுப்புற நடனக்கல்வியாளராவார். இவர் நியூயார்க் மாநில பொதுப் பள்ளி அமைப்பில் நடன ஆசிரியராகவும், நியூயார்க் கல்வித் துறையின் தடகள ஆய்வாளராகவும் இருந்தார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் பொழுதுபோக்கு வாழ்க்கையின் கலாச்சார நடத்தை புர்ச்செனலை பாதித்தது. ஆரம்ப கால வாழ்க்கைபுர்செனல் அக்டோபர் 18, 1875 இல், இந்தியானாவின் ரிச்மண்ட் என்ற இடத்தில் சார்லஸ் ஹென்றி புர்ச்செனலுக்கும் அவரது இரண்டாவது மனைவி மேரி எலிசபெத் டே என்பவருக்கும் பிறந்தார். [3] இவரது தந்தை ஒரு நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்தவர். [4] மற்றும் மேரிலாந்தில் பிறந்த ஒரு முக்கிய வழக்கறிஞரும் ஆவார். அயர்லாந்தில் பிறந்த அவரது முதல் மனைவி எலன் 1864இல், அவரது 30வது வயதில் இறந்தார். புளோரா என்பது இவருக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். பின்னர் இவர் எலிசபெத் என்ற பெயரைப் பெற்றார். புர்ச்செனல் என்கிற தனது குடும்பப் பெயரை "புர்செனெல்லே" என்று உச்சரிக்கப்பட்டது. [3] 1880ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் "புர்செனல்" "புரோக்கெண்ட்" உடன் ஆங்கிலமயமாக்கப்பட்டதாகக் காட்டுகிறது. நான்கு சிறுமிகளும் மற்றும் ஒரு சிறுவனும் இருந்த குடும்பத்தில் புர்ச்செனல் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். [3] இவரது குழந்தை பருவ நாட்டுப்புற நடன வாழ்க்கை "பழைய நாட்டின் பல மணிநேர நடனம் மற்றும் பாடல்களை பாடிய ஒரு திறமையான இசை குடும்ப வட்டத்திலிருந்து" வந்ததாகும். [3] இவர், தொலைதூர மலை கிராமத்தில் வாழும் மக்களின் நடன நிகழ்ச்சிகளைக் கண்டு, நாட்டுப்புற நடனத்தின் நுட்பங்களை கற்றுக்கொண்டார். இதற்கு, பாடகராக இருந்த இவரது தாய் ஒரு காரணமாவார். இவரது தாய் குதிரையின் மூலம் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலை பிரதேசங்களுக்கு பயணப்படும் பொழுது இவரையும் உடன் அழைத்துச் சென்றார். இதனால், நாட்டுப்புற நடனம் இவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. [3] இவரது தந்தை குறிப்பாக நாட்டுப்புறக் கதைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். [5] புர்ச்செனல் ஏர்ல்காம் கல்லூரியில் பயின்றார். 1896 இல் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். [6] பின்னர் இவர் பாஸ்டன் பல்கலைக்கழக சார்ஜென்ட் கல்லூரிக்குச் சென்றார். இது ஒரு உடற்பயிற்சிப் பள்ளி ஆகும். இவர், 1898 ஆம் ஆண்டில் சார்ஜென்ட் கல்லூரியில் பட்டம் பெற்ற [6] பிறகு, இவர் எலும்பியல் துறையில் மருத்துவ உடற்பயிற்சியாளராக இருந்தார். பின்னர் இந்த மருத்துவ உடற்பயிற்சி கூடமானது பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவ மையமாக மாறியது. [6] இவர் பாஸ்டன் மற்றும் சிகாகோவில் 1898 முதல் 1902 வரை உடற்கல்வி திட்டங்களை இயக்கியுள்ளார். [3] புர்ச்செனல், நடன கல்வியாளர் மெல்வின் கில்பர்ட் ஏற்படுத்திய தாக்கத்தினால், உடல் கல்வியில் நடன அசைவுகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமாய் இருந்தார். [7] இவர் நடனக் கல்வி தத்துவத்தை கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றார். கில்பெர்ட்டின் நடன நுட்பங்கள் பல்கலைக்கழகத்தில் அவர்களின் உடல் பயிற்சி வகுப்புகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று இவர் நினைத்தார். [7] 1902 முதல் 1905 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கல்லூரியில் புர்ச்செனல் ஆசிரியராக பணிபுரிந்தார். இங்கே இவர் அமெரிக்கா மட்டுமல்லாமல், கனடிய மற்றும் ஐரோப்பிய நாட்டுப்புற நடனக் கலைஞர்களின் நடன நுட்பங்களையும் ஆராய்ச்சி செய்தார். 1904 ஆம் ஆண்டு தொடங்கி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளின் நாட்டுப்புற நடன நுட்பங்களைச் சேகரித்தார். [8] ஆளுமைநாட்டுப்புற நடனம் குறித்த அமெரிக்காவின் முன்னணி அதிகாரமாக புர்ச்செனல் அறியப்பட்டார். [8] இவர், தனது மூத்த சகோதரி ரூத்துடன் இணைந்து 1916இல் அமெரிக்க நாட்டுப்புற நடன சங்கத்தின் அமைப்பாளர்களாக இருந்தார். [8] மேலும், இவர் அமெரிக்க நாட்டுப்புற நடனக் காப்பகத்தையும் நிறுவினார். [9] குறிப்புகள்
நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia