ஏழாம் நாள் வருகை சபை
ஏழாம் நாள் வருகை திருச்சபை (seventh-day Adventist Church, செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபை) எனப்படுவது சனிக்கிழமையை ஓய்வு நாளாய்க் (ஷபாத்) கருதும் யூத வழக்கத்தை பின்பற்றும் கிறித்தவச் சபையினர் ஆவர். கிறித்துவின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்பது இவர்களின் முக்கியக் கோட்பாடு ஆகும். மற்றபடி விவிலியத்தின் புனிதத்தன்மை, திரித்துவக் கோட்பாடு போன்றவற்றில் இவர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்களுடன் ஒத்த கொள்கையைக் கொண்டுள்ளனர். எலன் ஜி. ஒயிட் என்ற பெண்மணி இச்சபையின் நிறுவனர்களுள் குறிப்பிடத்தக்கவர்[3]. உலகம் முழுதுமாக மொத்தம் 16.3 மில்லியன் மக்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சபை சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவதோடு புகையிலை, மது ஆகியவற்றையும் தவிர்க்கும் படி தனது உறுப்பினர்களை வலியுறுத்துகிறது. அமெரிக்க தேசிய நல நிறுவனம் மூலம் நடந்த ஆராய்ச்சியால் அட்வென்டிஸ்ட் சபையினர் மற்றவர்களை விட சராசரியாக 4 முதல் 5 ஆண்டுகள் அதிக ஆயுளுடன் வாழ்வதாகத் தெரிய வந்தது [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia