ஐ-பேடு மினி 4

ஐ-பேடு மினி (iPad Mini 4)ஆப்பிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் கை கணினிகளில் நான்காம் தலைமுறையை சேர்ந்த கையடக்கக் கணினி ஆகும். இந்தக் கைக்கணினியை செப்டம்பர் 9, 2015 அன்று ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் "Hey Siri" என்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அம்சங்கள்

மென்பொருள்

ஐ-பேட் மினி 4 கைக்கணினியில் iOS 9 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. iOS 9 இயங்குதளம் நிறுவப்பட்ட முதல் ஆப்பிள் சாதனம் இது ஆகும். ஒரே நேரத்தில் பல்பணி செய்யும் சிறப்பு அம்சம் கொண்டதாக இந்தத் தொடுதிரை கைக்கணினி அமைந்துள்ளது.  

இந்தக் கைக்கணினி iOS 9.1 இயங்குதளத்தை ஏற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [1]

வடிவமைப்பு

ஐ-பேட் மினி 4, இதன் முந்தைய பதிப்பான ஐ-பேட் மினி 2, 3 ஐ விட சிறிது உயரமாகவும், அகலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய  பதிப்புகளை விட சிறிது எடை குறைவாக உள்ளது.

ஐ-பேட் மினி 4, சாம்பல், வெள்ளி, மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

  1. Clover, Juli (October 21, 2015). "Apple Releases iOS 9.1 With New Emoji, Live Photos Improvements". Mac Rumours. Retrieved October 21, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya