ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு அறிவியல் அமைப்பாகும். நிலவமைப்பு, இயற்கை வளம், இயற்கை இடையூறு போன்றவைகளைப் பற்றி இதன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். உயிரியல், புவியியல், நிலவியல், நீரியல் ஆகிய பிரிவுகளே இதன் முக்கிய ஆய்வுப்பிரிவுகளாகும். இது ஐக்கிய அமெரிக்க உள்துறையின் ஒரே அறிவியல் அமைப்பாகும். இதில் தோராயமாக 8,670 பேர் பணிபுரிகிறார்கள்[3] மற்றும் இதன் தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகரில் உள்ளது.
ஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பரிந்துரையால் 1879ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் அமெரிக்க நடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு அரசு நிலங்களை வகைப்படுத்தவும், புவியியல் கனிம வளம், மற்றும் தேசிய உற்பத்திக்களம் ஆகியவற்றை ஆய்வுசெய்யவும் நிறுவப்பட்டது.
தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகர்நிலநடுக்க அசைபடம்அண்மைய நிலநடுக்கப் படம்
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் வெளியேடுகள்
உலகின் பெரிய பூகோள விஞ்ஞான நூலகமான ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை நூலகத்தில் இதன் பல வெளியேடுகள் சேகரிப்படுகிறது. இதன் வெளியேடுகளை இணையத்திலும் காணலாம் யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை மற்றும் வாங்கலாம் யு.எஸ்.ஜி.எஸ் அங்காடி.