ஐக்கிய அமெரிக்க பொருளாதார நெருக்கடி, 2008

ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு 2008 ஆம் ஆண்டும் உட்பட்டுள்ளது. வீட்டுச் சந்தை நெருக்கடி, உற்பத்தித்துறை வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு ஆகிய காரணங்கள் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதரத்தை நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளன. இதனால் பல வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டன. மேலும் பல ஐக்கிய அமெரிக்க அரசால் கடனுதவி செய்யப்பட்ட தேசியமயமாக்கப்பட்டுள்ளன.

கொள்கையும் முரணும்

ஐக்கிய அமெரிக்கா தாரண்மைவாத அல்லது முதலாளித்துவ கொள்கையை தீவரமாக வலியுறுத்தும் நாடு ஆகும். மற்ற நாடுகளின் தேசிய நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று வறுபுறுத்து அரசு ஆகும். மற்ற நாடுகளின் கட்டுப்பாடுகளை (Regulations) குறைக்கும் படி அமெரிக்கா வற்புறுத்துவதுண்டு. ஆனால் இந்த நெருக்கடி அரசு சந்தையை தகுந்தவாறு கட்டுப்படுத்த தவறியதால்தான் நிகழ்ந்தது என்ற கருத்து உண்டு. மேலும் இதை தீர்க்க AIG போன்ற பல நிறுவங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசு வாங்கி தேசியமயப்படுத்தியுள்ளது. இதுவும் இதன் வழமையான கொள்கைக்கு முற்றிலும் முரணான செயலாகும். இந்த நெருக்கடின் அமெரிக்கா முன்னிறுத்தும் தீவர முதலாளித்துவ கொள்கைக்கு ஒரு தோல்வியாக பார்க்கப்படுகிறது.

ஒட்டாண்டி ஆகிவிட்ட நிறுவனங்கள்

அரசு மீட்ட நிறுவனங்கள்

பொருளாதர மீட்புத் திட்டம்

நெருக்கடிக்கு உள்ளான பல்வேறு தனியார் வணிக நிறுவங்களை மீட்க ஐக்கிய அமெரிக்கா $700 பில்லியன் டாலர் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. பல்வேறு மற்ற உதவித் தொகைகளை கூட்டி இத்தொகை 1 ரில்லியன் டாலர்களுக்கு மேலாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் GDP 2007 ம் ஆண்டுக்கு $13.8 ரில்லியன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya