ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டம்ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டம் (Copyright Law of the United States) ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் தனிப்பட்ட உரிமைத் தொகுதிகள் வழங்குவதன் மூலமாக கலையையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கின்றது. பதிப்புரிமைச் சட்டம் ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் தங்கள் படைப்புக்களை ஆக்கவும் அவற்றின் படிகளை விற்கவும் வழிப்பேறு ஆக்கங்களை உருவாக்கவும் பொதுவெளியில் தங்கள் படைப்புக்களை காட்சிப்படுத்தவும் நிகழ்த்தவும் தனிப்பட்ட உரிமைகளை வழங்குகின்றது. இந்த தனிப்பட்ட உரிமைகளுக்கு நேரக்கெடு விதிக்கப்பட்டுள்ளது; பொதுவாக படைப்பாளி இறந்தபிறகு 70 ஆண்டுகள் வரை இந்த உரிமைகள் நிலைத்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் சனவரி 1, 1923க்கு முந்தைய இசைத் தொகுப்புகள் பொதுப்பரப்பில் உள்ளனவாக கருதப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமைச் சட்டம் 1976ஆம் ஆண்டின் பதிப்புரிமை சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் பதிப்புரிமைப் பிரிவு எனப்படும்[1] கூறு 1, பிரிவு 8, உட்பிரிவு 8 கீழ் வெளிப்படையாக பதிப்புரிமைச் சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இந்தப் பதிப்புரிமை பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கு கீழமை அதிகாரம் உள்ளது:
பதிப்புரிமை பதிவுகளையும் பதிப்புரிமை மாற்றுகைகளையும் மற்றும் பிற நிர்வாக செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமை அலுவலகம் கையாள்கின்றது.[3] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia