ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் என்போர் அலாஸ்காவின் சில பகுதிகள் உட்பட இன்றைய ஐக்கிய அமெரிக்காவுக்கு உட்பட்ட வட அமெரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், ஐரோப்பியர் வருகைக்கு முன்பிருந்தே நீண்டகாலம் அங்கு வசித்து வருபவர்களும் ஆவர். இவர்களுள், பெரும் எண்ணிக்கையிலான தனித்துவமான பழங்குடிகள், நாடுகள், இனக்குழுக்கள் என்பன அடங்கும். இவர்களுட் பலர் இன்றும் அரசியல் சமுதாயங்களாக இருந்து வருகின்றனர். இவர்கள், அமெரிக்க இந்தியர், இந்தியர், மூல அமெரிக்கர் (Original Americans), அமெரிந்தியர் போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுவது உண்டு. எல்லாத் தொல்குடி அமெரிக்கர்களும் தொடர்ச்சியாக அமைந்த 48 மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. இவர்களிற் சிலர், அலாஸ்காவையும் தீவுகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். இத்தகையவர்களில் அலாஸ்காவைச் சேர்ந்த, இனுப்பியாக், யூப்பிக், எஸ்கிமோக்கள், அலெயுத்துகள் என்பவர்கள் எல்லா வேளைகளிலும் தொல்குடி அமெரிக்கராகக் கருதப்படுவதில்லை. எனினும், 2000 ஆண்டிற்கான குடித்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களில், இவர்கள் எல்லோரையும் சேர்த்து அமெரிக்க இந்தியர்களும், அலாஸ்கத் தொல்குடிகளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹவாய்த் தொல்குடிகளும், பல்வேறு பசிபிக் தீவு அமெரிக்கர்களும் கூடத் தொல்குடி அமெரிக்கர்களாகக் கருதப்படலாம், ஆயினும் இது பொதுவான நடைமுறை அல்ல. ஐரோப்பியக் குடியேற்றம்அமெரிக்காவில் இடம்பெற்ற ஐரோப்பியர் குடியேற்றம், தொல்குடி அமெரிக்கர்களையும், அவர்கள் பண்பாட்டையும் சிதைத்துவிட்டது. 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை, ஐக்கிய அமெரிக்கா ஆகிவிட்ட பகுதிகளிலிருந்த மக்களுக்கு, ஐரோப்பியக் குடியேற்றம் பல வழிகளிலும் நாசம் விளைவித்தது. ஐரோப்பியக் குடியேற்றக்காரரினால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளும், இன அழிப்பும், ஐரோப்பாவிலிருந்து வந்த தொற்று நோய்கள், சொந்த நிலங்களிலிருந்து இடம் பெயர்த்தமை, அடிமைகள் ஆக்கப்பட்டமை, உள்நாட்டுப் போர் என்பவற்றுடன், பெருமளவு கலப்பு மணங்களும் இந்த அழிவுகளுக்கு முக்கிய காரணங்கள் ஆயின. தொல்குடி அமெரிக்கர்; கொடிகளும், முத்திரைகளும்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia