ஐதராபாத்து பல்லுயிர் மாநாடு 20122012ல் ஐக்கிய நாட்டுச்சபையின் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு (சி.பி.டி) ஹைதராபாத் பல்லுயிர் மாநாடு 2012 (2012 Hyderabad Biodiversity Conference) என அக்டோபர் 1–19 முதல் இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்றது. சுமார் 194 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. கிட்டத்தட்ட 8,000 முதல் 10,000 பிரதிநிதிகள் உயிரியற் பல்வகைமை மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.[1] இலச்சினைசிபிடி இலச்சினை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. மேல் பகுதியில் ராயல் வங்காளப் புலி, ஒரு பெண் ஒரு பறவை மற்றும் ஒரு இலை மையத்தில் மற்றும் வட்டத்தின் கீழ்ப் பகுதியில் ஒரு டால்பின். ராயல் வங்காளப் புலி அனைத்து நிலப்பரப்பு விலங்குகளையும் குறிக்கிறது. இது இந்திய வனவிலங்குகளையும் குறிக்கிறது. ராயல் வங்காளப் புலி ஒரு அருகிய இனம், மற்றும் சிபிடியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பல்லுயிர் இழப்பைக் குறைப்பதாகும். எனவே, இது இந்த அமைப்பின் செயல்பாடுகளின் தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துகிறது. டால்பின் கடலைக் குறிக்கிறது. டெல்பினிடே குடும்பம் செட்டேசியன் வரிசையில் மிகப்பெரியது. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. இதனால் உலக நீர் வாழ் உயிரினங்களைக் குறிக்கிறது. பெண், அன்னை பூமியைக் குறிக்கிறது. அன்னை பூமி நமக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மனித மற்றும் பிற உயிரினங்களின் ஒவ்வொரு அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறது. இலச்சினையில் உள்ள பெண், இந்தியக் கலாச்சாரத்தைக் குறிக்கும் வகையில் தானியங்களை அறுவடை செய்யுமாறு உள்ளார். இலையும் பறவையும் தாவரங்களையும் விலங்கினங்களையும் குறிக்கின்றன. நாம் இயல்பாக உயிர்வாழ இவை முக்கியம். இவ்வாறு இவை இயற்கையின் சமநிலையைக் குறிக்கின்றன. இந்தியாவில் 22 அலுவல் மொழிகளும், 398 பேசப்படுகின்ற மொழிகளும் உள்ளன. இந்த மொழி பன்முகத்தன்மைக்கு மத்தியில், சமற்கிருதம் ஒற்றுமையின் நூலினைக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்த மொழிகளில் பல சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை. ஆங்கில மொழிபெயர்ப்பு கீழ் விளிம்பில் வட்டமிடப்பட்டுள்ளது. இலச்சினை ஒரு வட்டத்தை உருவாக்குகிறது. வட்டம் நமது பூமியைக் குறிக்கிறது. இது ஒரு வாழ்க்கை வட்டத்தையும் குறிப்பதாக உள்ளது. இது நம் இயற்கையின் கோட்பாடு. இந்தியத் தத்துவத்தில், ஒரு வட்டம், ஒரு புள்ளி. ஒரு மீவியற்பியல் சொல். இது அனைத்து படைப்புகளின் தோற்ற புள்ளியாக முன்மொழியப்பட்டது. ஒரு வட்டத்திற்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. இதனால் பிரபஞ்சம் தன்னைத்தானே தன்னுள்ளே குறிக்கிறது.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia