ஐதரோனியம் பெர்குளோரேட்டு (Hydronium perchlorate) என்பது [H3O]ClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். திண்மமாகவும் நிலைப்புத்தன்மை கொண்ட ஐதரோனியம் உப்பாகவும் இருப்பதால் இதுவோர் அசாதாரணமான உப்பாகக் கருதப்படுகிறது. ஐதரோனிய்ம ([H3O]+) நேர்மின் அயனியும் பெர்குளோரேட்டு ( ClO−4) எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.
தயாரிப்பு
நீரற்ற பெர்குளோரிக்கு அமிலத்துடன் தண்ணீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரோனியம் பெர்குளோரேட்டு உருவாகிறது:[1]
HClO4 + H2O → [H3O]+ClO4−
சோடியம் 2,6-டைஃபார்மைல்-4-மெத்தில்பீனோலேட்டு மற்றும் 2,6-டைஃபார்மைல்-4-மெத்தில்பீனாலின் பெருவளைய சிப் காரம் ஒரு கொடுக்கிணைப்பு முகவராக Cu(II) உடன் பிணைந்துள்ளது. செப்பு(II) பெர்குளோரேட்டுடன் கூடிய பெருவளைய ஈந்தணைவி பரிமாற்றம் ஐதரோனியம் பெர்குளோரேட்டின் நிறமற்ற படிகங்களை அளிக்கிறது.[2]
மேற்கோள்கள்
↑C. E. Nordman (1962). "The crystal structure of hydronium perchlorate at -80°C" (in en). Acta Crystallographica15: 18–23. doi:10.1107/S0365110X62000055.
↑Azhar A Rahman; Anwar Usman; Suchada Chantrapromma; Hoong-Kun Fun (2003). "Redetermination of hydronium perchlorate at 193 and 293 K" (in en). Acta Crystallographica C59 (Pt 9): i92-4. doi:10.1107/s0108270103010461. பப்மெட்:12944636.