ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்
ஐந்தாம் சார்லசு (Charles V, எசுப்பானியம்: Carlos; German: Karl; இத்தாலியம்: Carlo; இலத்தீன்: Carolus; டச்சு: Karel;[a] 24 பெப்ரவரி 1500 – 21 செப்டம்பர் 1558) 1516 முதல் ( முதலாம் சார்லசாக) எசுப்பானியப் பேரரசையும் 1519 முதல் புனித உரோமைப் பேரரசையும் ஒருசேர ஆண்டுவந்த அரசராவார். 1506இலிருந்து பர்கண்டி சிற்றரசின் நிலங்களையும் ஆண்டுவந்தார். 1554 முதல் 1556 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பதவிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் துறந்து வந்தார். மரபுரிமை வழியே மேற்கு, மத்திய, தெற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தவிரவும் அமெரிக்காவிலிருந்த சார்புநிலங்களையும் ஆசியப் பகுதிகளும் இவரது ஆளுகைக்கு கீழிருந்தன. எனவே இவரது ஆளும் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4 மில்லியன் சதுர கிலோ மீட்டராக (1.5 மில்லியன் சதுர மைல்கள்), பரந்திருந்தது.[3] இந்த ஆட்சியே முதன்முதலில் "எப்போதும் சூரியன் மறையாதப் பேரரசு" என குறிப்பிடப்பட்டது.[4] படிமத்தொகுப்பு
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சார்லசு V
|
Portal di Ensiklopedia Dunia