ஒன்றிணைப்புச் சட்டங்கள் (Acts of Union) என இரு நாடாளுமன்ற சட்டங்கள் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் 1706ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இசுக்கொட்லாந்துடன் ஒன்றிணைப்பு சட்டம் மற்றும் 1707ஆம் ஆண்டில் இசுக்கொட்லாந்து நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இங்கிலாந்துடன் ஒன்றிணைப்பு சட்டம் - குறிப்பிடப்படுகின்றன. இரு நாடுகளின் நாடாளுமன்றங்களை பிரதிநிதிப்படுத்திய ஆணையர்களின் உரையாடல்களுக்கிணங்க சூலை 22, 1706 ஒப்பிட்ட ஒன்றிய உடன்பாட்டுக் கூறுகளை செயல்படுத்தும் விதமாக இருநாட்டு நாடாளுமன்றங்களும் இந்தச் சட்டங்களை முறையே நிறைவேற்றின. இந்தச் சட்டங்கள் முன்பு தனி நாடுகளாக, இரு நாடாளுமன்றங்களுடன் ஆனால் ஒரே மன்னருடன் விளங்கிய இங்கிலாந்து இராச்சியத்தையும்இசுக்கொட்லாந்து இராச்சியத்தையும் ஒன்றிணைத்தன. புதிதான ஒன்றிணைந்த நாடு "பெரும் பிரித்தானியா" என அழைக்கப்பட்டது.[3]
இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்திடமிருந்துஇசுக்கொட்லாந்து மன்னர் ஆறாம் ஜேம்ஸ் மரபுவழியாகப் பெற்ற 1603ஆம் ஆண்டிலிருந்தே இரு நாடுகளும் ஒரே மன்னரைக் கொண்டிருந்தன; மணிமகுடங்களின் ஒன்றிணைப்பு என இது விவரிக்கப்பட்டாலும் 1707 வரை உண்மையில் ஒருவர் தரித்த இரு மகுடங்களாகவே இருந்தது. முன்னதாக இருநாடுகளையும் நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாக ஒன்றிணைக்க 1606, 1667, மற்றும் 1689 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மூன்று முயற்சிகள் தோல்வியுற்றன.
இந்தச் சட்டங்கள் மே 1, 1707 முதல் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நாளில் இசுக்கொட்லாந்து நாடாளுமன்றமும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் இணைந்து பெரும் பிரித்தானிய நாடாளுமன்றம் உருவானது. இது இலண்டனின்வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் அமைந்தது.[4] எனவே இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றங்களின் ஒன்றிணைப்பு எனக் குறிப்பிடப்படுகின்றன. [5]
குறிப்புகள்
மேற்கோள்கள்
↑The citation of this Act by this short title was authorised by section 1 of, and Schedule 1 to, the Short Titles Act 1896. Due to the repeal of those provisions, it is now authorised by section 19(2) of the Interpretation Act 1978.
↑The citation of this Act by this short title was authorised by the Statute Law Revision (Scotland) Act 1964, section 2 and Schedule 2. Due to the repeal of those provisions it is now authorised by section 19(2) of the Interpretation Act 1978.
Campbell, R. H. "The Anglo-Scottish Union of 1707. II. The Economic Consequences". Economic History Review vol. 16, no. 3, 1964, pp. 468–477 onlineபரணிடப்பட்டது 2 நவம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம்
Cullen, K. J. (2010). Famine in Scotland: The "Ill Years" of the 1690s. Edinburgh University Press. ISBN978-0748638871.
Robertson, Barry (2014). Royalists at War in Scotland and Ireland, 1638–1650. Routledge. ISBN978-1317061069.
Smout, T. C. "The Anglo-Scottish Union of 1707. I. The Economic Background". Economic History Review vol. 16, no. 3, 1964, pp. 455–467. onlineபரணிடப்பட்டது 13 ஏப்ரல் 2020 at the வந்தவழி இயந்திரம்
Stephen, Jeffrey (January 2010). "Scottish Nationalism and Stuart Unionism". Journal of British Studies49 (1, Scottish Special). doi:10.1086/644534.
Watt, Douglas (2007). The Price of Scotland: Darien, Union and the wealth of nations. Luath Press. ISBN978-1906307097.
Whatley, C (2001). Bought and sold for English Gold? Explaining the Union of 1707. East Linton: Tuckwell Press. ISBN978-1-86232-140-3.