ஒருங்கிணைத்தல் (கணினி அறிவியல்)கணினி அறிவியலில், ஒருங்கிணைத்தல் (coalescing) என்பது அருகருகில் இருக்கும் இரண்டு கட்டற்ற நினைவகங்களை இணைக்கும் நினைவக மேலாண்மையின் பொறுப்பாகும். ஒரு கணினி நிரலுக்குச் சில நினைவகத் தொகுப்புகள் இனித் தேவையில்லை என்றால் இந்த நினைவகத் தொகுப்புகள் விடுவிக்கப்படுகின்றன. இவை ஒருங்கிணைக்கப்படாவிட்டால், அவை அருகருகில் இருந்தபோதும் தனித்தனியாவே இருக்கும். அடுத்து கட்டற்ற இந்த விடுவிக்கப்பட்ட நினைவக அளவுக்குத் தேவைப்படும் முழு எண்ணளவிலான நினைவக வேண்டல் வந்தால், இந்தப் பயனில் இல்லாத நினைவகத் தொகுப்புகளை வழங்க முடியாது. இந்த அருகருகில் உள்ள விடுவிக்கப்பட்ட தொகுப்புகளை ஒதுக்கீடு செய்ய முடியாது. ஒருங்கிணைத்தல், இந்த விடுபட்ட தொகுப்புகளை இடையில் எல்லையேதும் இல்லாதபடி சேர்த்துவிடுவதால், இந்தச் சிக்கலைத் தீர்க்கிறது. அப்போது ஒருங்கிணைத்த நினைவகத்தில் இருந்து ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ வழங்கவியலும்.[1] ஒரு பயன்பாடு நினைவகத்தை விடுவிக்கும்போது, பயன்பாட்டை பயன்படுத்தும் நினைவகப் பிரிவில் இடைவெளிகள் ஏற்படும். மற்ற நுட்பவகை ஒருங்கிணைத்தல், பிரிந்துள்ள வெளிப் பிரிவுகளைக் குறைக்க பயன்படுகிறது, ஆனாலும் முற்றிலும் பயனளிப்பதில்லை. தொகுதிகள் உடனடியாக விடுவிக்கப்படும்போது ஒருங்கிணைத்தலை உடனே ஏற்படுத்தலாம் அல்லது சிறிது நேரம் கழித்தும் ஏற்படுத்தலாம் அல்லது ஒருங்கிணைத்தலை நிகழ்த்தாமலே கூட இருக்கலாம். ஒருங்கிணைத்தலும் குவித்துச் சுருக்குதலும் சார்ந்த கணினி நுட்பங்கள் தேவையற்ற கழிவுகளைச் சேகரிப்பில் திரட்டிவைக்க, சிலவேளைகளில் பயன்படுகின்றன. மேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia