ஓத அட்டவணைகள்![]() ஓத அட்டவணைகள் (Tide tables), அல்லது ஓத வரைபடங்கள் Tide chart) ஓத முன்கணிப்புக்குப் பயன்படுகின்றன. இவை குறிப்பிட்ட கடற் பகுதியின் உயர், தாழ் ஓதங்களின் நேரங்களையும் மட்டங்களையும் காட்டுகின்றன.[1] உயர் , தாழ் இடையில் உள்ள ஓத உயரமும் நேரமும் பன்னிரண்டன்கூறு விதியைக் கொண்டு கணக்கிட்டுப் பெறலாம் அல்லது அப்பகுதிக்காக வெளியிடப்பட்ட ஓத வரைவில் இருந்து கூடுதல் துல்லியமாகக் கணக்கிட்டு பெறலாம். ஓத மாட்டங்கள் தாழ் நீர்க் குத்துநிலைத் தரவு மட்டத்தில் இருந்து தரப்படும். இவை ஐக்கிய அமெரிக்காவில் சராசரி தாழ்ந்த தாழ்மட்டத்தில் இருந்து தரப்படுகின்றன.[2] வெளியீடும் நோக்கமும்ஓத அட்டவண பல முறைகளில் வெளியிடப்படுகிறது. அவற்றுள் அச்சிட்டு வெளியிடுவதும், இணையத்தில் வெளியிடுவதும் தற்போது நடப்பில் உள்ள சிறந்த முறைகளாகும். பெரும்பாலான ஓத அட்டவணைகள் பெரிய துறைமுகங்களுக்கு ஒராண்டுக்கு மட்டுமே கணக்கிட்டு வெளியிடப்படுகின்றன; இவை செந்தரத் துறைமுகங்கள் எனப்படுகின்றன. இந்தச் செந்தரத் துறைமுகங்கள் அருகருகிலும் இருக்கலாம் அல்லது நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் இருக்கலாம். சிறு துறைமுகங்களுக்கான ஓத நேரங்கள், ஓத அட்டவணை பயனர்களால் மதிப்பீடு செய்து பெறப்படும். இக்கணக்கீடுகள் மாந்த உழைப்பால், செந்தரத் துறைமுகங்களுக்கும் சிறு துறைமுகங்களுக்கும் வெளியிடப்பட்ட நேர, உயர வேறுபாடுகளில் இருந்து மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.[3] நாளும் நேரமும்வேனில் ஓத நேரமும் மாரி ஓத நேரமும் தோராயமாக ஒருவார இடைவெளி தள்ளி அமையும்; இவற்றின் உயரங்கள் செவ்வியல் ஓதங்களில் இருந்து முடிவு செய்யப்படும்: சிறு நெடுக்கம் மாரி ஒதத்தையும் பெரிய நெடுக்கம் வேணில் ஓதத்தையும் சுட்டும்மோதங்களின் வட்டிப்பு அல்லது சுழற்சிமுறை, நிலாவின் கலைகளோடு சார்ந்துள்ளன; மிக உயர்ந்த ஓதங்கள் (வேனில் ஓதங்கள்) முழுமதி நாட்களில் (வெள்ளுவா நாட்களில்) ஏற்படுகின்றன. என்றாலும், ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் அன்றாட அரைநாள் ஓதங்கள் நிலாவின் வட்டணை அலைவுநேரத்தைப் பொறுத்துள்ளன. எனவே, அவை ஓவ்வொரு நாளும் தோராயமாக 24/27.3 மணிகளுக்குப் பின்னர் அல்லது 50 மணிதுளிகளூக்குப் பின்னர் நிகழும்; ஆனால், துல்லியமான ஓத அட்டவணைகளை பெற, மேலும் பல நோக்கீடுகளும் கருதல்களும் தேவைப்படுகின்றன. வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில், அன்றாட தாழ், உயர் ஓதங்களுக்கு இடையிலான நேரம் 6 மணியும் பத்து மணித்துளிகளாக அமைகிறது. மேலும் இந்த ஓத மட்டங்கள் நிலவின் (Moon) ஈர்ப்பு விசையைப் பொருத்து அமைகின்றது. வேனில் ஓதங்கள் அல்லது உயரோதங்கள் முழுமதி (Full moon day) நாட்களில் ஏற்படுகின்றன. வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் கணக்கீடு செய்யப்பட்டதில் இரண்டு உயர் ஓதங்களுக்கு இரண்டு தாழ் ஓதங்கள் என்ற விகிதத்தில் ஓதங்கள் ஏற்படுகின்றன. முழுமதி நாட்களை அடுத்த இரண்டு நாட்களில் மிகு உயரோதங்கள் இப்பகுதியில் ஏற்படுகின்றன. கணக்கீடுஓதக் கணக்கீடு இன்று இலக்கவியல் கணினிகள் வழியாக கணக்கிடப்படுகிறது. தொடக்கக் காலங்களில் அலுவலர்களே ஓதங்களை, ஓத முன்கணிப்பு இயந்திரம் (tide-predicting machine) வழியாகக் கணக்கிட்டனர். அது ஓர் அறைகூவலான பணியாகவே இருந்தது. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia