குறிப்பிட்ட பிணைப்பத்திரம் தவறாது வட்டி வழங்கும்வரை, கடன் தவறல் மாற்றை வாங்கியவர் பிணைப்பத்திரத்தின் முதிர்ச்சி வரை விற்பவருக்கு காலாண்டு கட்டணங்கள் கட்டி வருவார்குறிப்பிட்ட பிணைப்பத்திரம் தவறினால், கடன் தவறல் மாற்றை வாங்கியவருக்கு விற்றவர் பிணைப்பத்திரத்தின் முழுமையான முக மதிப்பை வழங்குவதுடன் பிணைப்பத்திரத்தை பொருண்மவடிவில் பெற்றுக்கொள்கிறார்.Sovereign credit default swap prices of selected European countries from January 2010 till October 2011. The left axis is basis points, or 100ths of a percent; a level of 1,000 means it costs $1 million a year to protect $10 million of debt for five years.
கடன் தவறல் மாற்று (credit default swap அல்லது சுருக்கி CDS ) என்ற முதலீட்டில் ஒரு நிறுவனத்தினால் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால் இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து அந்தப் பணத்தைப் பெறுவதாகும். இது ஒருவகை காப்புறுதி என்றாலும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன :
இவ்வகை முதலீட்டில் பிணைப்பத்திரங்கள், கடன்தவறல் மாற்றுக் கொள்வோருடையதாக இருக்க வேண்டியதில்லை. காப்புறுதி நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கே காப்புறுதி வழங்குகின்றன.
காப்புறுதி நிறுவனங்கள் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டவை. ஆனால் கடன் தவறல் மாற்றுக்கு அரசுக்கட்டுப்பாடு எதுவும் இல்லை.
காப்புறுதி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பெரும்பாலானோருக்கு காப்புறுதித்தொகை வழங்குமாறு பணம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் சிடிஎஸ் விற்பனையாளர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதமையால் கவனக்குறைவுடன் நடந்து கொள்வர்
ஒருவரிடம் பிணைப்பத்திரம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதில்லை யாதலால் சூதாட்ட நோக்குடன் நட்டமடையக்கூடிய நிறுவனங்களின் பத்திரங்களுக்கு கடன் தவறல் மாற்று வாங்குவோர் உள்ளனர்.
Pezzuto, Ivo (2008). Miraculous Financial Engineering or Toxic Finance? The Genesis of the U.S. Subprime Mortgage Loans Crisis and its Consequences on the Global Financial Markets and Real Economy, ISSN 1662-761X. In this paper Prof. Prof. Pezzuto explained the root causes of the financial crisis, first introduced the term short-termism associated to the 2008 financial crisis, and predicted the risk of a EU peripheral debt crisis. Available online SSRN: http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1332784