கடல் மலை![]() கடல் மலை (sea mount) என்பது கடற்படுகையில் இருந்து உயர்ந்து ஆனால் கடல்பரப்பை அடையாத நீரில் மூழ்கிய பெரிய நிலவடிவம் ஆகும். எனவே இது தீவோ, சிறுதீவோ அல்லது நீர்மேல் பாறை முகடோ ஆகாது. இவை அழிந்த எரிமலைகள் திடீரென உயித்தெழுவதால் உருவாகின்றன. இவை கடல்தரையில் இருந்து 1000 முதல் 4000 மீட்டர் உயரம் வரை எழும்புகின்றன. இவற்றில் கடல்தரையில் இருந்து குறைந்தது 1000 மீட்டர் வரை உயரும் மலைகள் கூம்பு வடிவில் அமைகின்றன.[1] இதன் கொடுமுடிகள் கடல் மேற்பரப்புக்கு அடியில் பல் நூறு முதல் பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அமைகின்றன; எனவே இவை ஆழ்கடல் மலைகள் ஆகும்.[2] புவியியல் கால கட்டங்களில் அவை படிமலர்ந்த போது மிகப் பெரிய கடல் மலைகள் கடல்மட்டத்தை அடைந்திருக்கலாம். ஆனால், அவை அலைகளால்ஆரிக்கப்பட்டு சமதள மேற்பரப்பை அடைந்திருக்கலாம்மவை கடல் மேற்பரப்பில்ரைருந்து அடியில் மூழ்கிய பிறகு அவை "கடலடிச் சமவெளிகள்" ஆகின்றன.[1] கடலில் 14,500 எண்ணிக்கையினும் கூடுதலான இனங்கண்ட கடல் மலைகள் உள்ளன;[3] இவற்றில் 9,951 கடல்மலைகளும் 283 கடலடிச் சமவெளிகளும் அடங்கும் ; இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,796,150 ச.கிமீ மட்டுமே நிலப்படம் வரையப்பட்டவையாகும்.[4] பேரெண்ணிக்கையில் உள்ளதால், பல கடல் மலைகள் ஆய்வு செய்து நிலப்படம் வரையப்படவில்லை. ஆழ அளவியலும் செயற்கைக்கோள் குத்துயர அளவியலும் ஆகிய இருதொழில்நுட்பங்கள் இந்த ஆய்வு இடைவெளியை நிரப்ப முயல்கின்றன. திட்டமிடப்படாது வழியில் சென்ற கப்பல்கள் கடல் மலைகளில் மோதிக் கொண்ட நிகழ்வுகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, முயிர்பீல்டு கடல் மலையின் பெயர் 1973 இல் மோதிய கப்பலின் பெயராகும். என்றாலும், மாபெரும் அச்சுறுத்தலாக கடல் மலைகளின் துருத்தல்கள் தரும் அழுத்தத்தால் ஏற்படும் பக்கவாட்டுக் கவிழ்வுகளே அமைகின்றன. இவை பெருந்திரளாக பேராழி அலைகளை உருவாக்கும் நிலச்சரிவுகளை தூண்டுகின்றன. கைவிடப்பட்ட, செயலிழந்த எரிமலைகள் பெருகியதால், அவை உலகின் மிகவும் பொதுவான கடல் சூழியல் அமைப்புகளில் ஒன்றாகிவிட்டது. கடல்மட்டநீரோட்டங்களும் ஆழ்கடல் நீரோட்டங்களும் கடல்மலைகளுக்கு நடுவில் உள்ள இடைவெளிகளும் மிதவை உயிரிகள், பவளப்பாறைகள், மீன்கள், கடல் பாலூட்டிகளை ஈர்க்கின்றன. இவை வணிகவியலாக மீன்பிடி தொழிலில் ஒரு கூட்டு விளைவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பல கடற்புறங்களில் இவை விரிவான மீன்வளங்களை உருவாக்குகின்றன. மீன்பிடி சூழலமைப்புகளில் மீன் வளங்கள் குறைவதற்கான தாக்கத்தைப் பற்றிய கவலைகளும், மீன்வளச் சரிவு பற்றிய நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஆரஞ்சு தோற்றமளிக்கும் ஓப்பிளசுடெத்தசு அட்லாண்டசு வழக்கினைக் கூறலாம். இவை கடல்மலை சுற்றுச்சூழலில் 95% தாக்கத்தை ஏற்படுத்தி, முழு கடல்மலைச் சுற்றுச்சூழலை மாற்றுவதாய் அமைகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்புவியியலும் புவிப்பரப்பியலும்
சூழலியல்
|
Portal di Ensiklopedia Dunia