கடல்சார் பட்டுப் பாதை அருங்காட்சியகம்![]() கடல்சார் பட்டுப் பாதை அருங்காட்சியகம் ( Maritime Silk Route Museum) என்பது சீனாவின் குவாங்டொங் மாகாணத்தின், யாங்சியாங்கிலுள்ள, ஐலிங் தீவில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். அருங்காட்சியகத்தின் பணிகள் 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது.[1] இந்த அருங்காட்சியகம் 2009 டிசம்பர் 24 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. . [2] இந்த அருங்காட்சியகம் 300,000 கலைப்பொருட்கள் மற்றும் நீர் தொட்டிகளில் உடைந்த கப்பல்களின் துண்டுகளை வைக்க தேவையான வசதிகளுடன் கட்டப்பட்டது. முக்கிய கண்காட்சி நன்காய் 1 கப்பல் விபத்து ஆகும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐலிங் தீவில் மூழ்கிய ஒரு மரக் கப்பல் ஆகும். [3] நன்காய் 1 படிக மாதிரியாக தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இது அருங்காட்சியகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இது ஆசியாவிலேயே நீருக்கடியில் காட்சிப்படுத்துவதற்கான இந்த வசதிகளைக் கொண்ட ஒரே அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் சிதைவிலிருந்து 200 கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [4] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia