கதிராமங்கலம் (தஞ்சாவூர் மாவட்டம்)
கதிராமங்கலம் (Kathiramangalam) கிராமம், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கதிராமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1] மீத்தைன் பிரச்சனை: கதிராமங்கலத்தில் 2017 ஆம் ஆண்டு வேலூர் செல்லும் சாலைக்கு அருகாமையில் மீத்தைன் கசிவு ஏற்பட்டது.இதனால் அங்கு போராட்டம் நடைப்பெற்றது இதனை போலிசார்கள் தடியடி நடத்தி கலைத்தனர்.. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கதிராமங்கலம் வந்தனர் .. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் மதிமுக தலைவர் வைகோ, நாம் தமிழர் கட்சி சீமான், திரைப்பட நடிகர் டி ராஜேந்தர், கருணாஸ், போன்ற பல தலைவர்கள் வந்து கதிராமங்கலம் மக்களுக்காக ஆதரவாக குரல் கொடுத்தனர் .. மக்கள் தொகையியல்2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கதிராமங்கலம் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 676 ஆகும்.[2] அதில் ஆண்கள் 338; பெண்கள் 338 ஆக உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் 373 ஆக உள்ளனர். [3] கோயில்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia