கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் (நூல்)கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் (Compendium of the Catechism of the Catholic Church) என்னும் நூல் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் என்னும் பெரிய நூலின் சுருக்கமாகவும், அதன் உள்ளடக்கத்தை வினா-விடை வடிவில் தொகுத்துத் தருகின்ற கையேடாகவும் அமைந்துள்ளது. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2005இல் வெளியிட்ட இந்நூலைத் தமிழக இலத்தீன் ஆயர் பேரவை தமிழில் மொழிபெயர்த்து, 2012ஆம் ஆண்டு, திண்டிவனம் முப்பணி நிலையம் வழியாக வெளியிட்டுள்ளனர்.[1] நூலின் தோற்றம்கத்தோலிக்க திருச்சபை வழங்குகின்ற போதனையைத் தொகுத்து அளிக்கும் ஏடாக 1992இல் "கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல்" (க.தி.ம.) வெளியிடப்பட்டது. அந்த ஏட்டில் அடங்கியுள்ள போதனையைத் தொகுத்து, சுருக்கமாக வழங்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் 2003இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஓர் ஆணைக்குழுவை ஏற்படுத்தினார். அவ்வமயம் நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவராக இருந்த கர்தினால் யோசேப்பு ராட்சிங்கர் (தற்போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்) க.தி.ம. சுருக்க ஏட்டின் உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடும் சிறப்புக் குழுவுக்குத் தலைமை வகித்தார். இரண்டு ஆண்டு உழைப்புக்குப் பின் அந்த ஏடு வெளியிடப்பட்டது. நூலின் நோக்கம்மக்கள் கத்தோலிக்க திருச்சபையின் போதனையை ஆழமாக அறிந்திடவும், அதைப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் கொண்டிடவும் இந்நூல் உதவும் என்று இந்நூலை வெளியிட்ட திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூறியுள்ளார். இந்நூலை அறிமுகம் செய்து அவர் 2005, சூன் 28இல் வெளியிட்ட அறிக்கையில் அவர் கீழ்வருமாறு கூறுகிறார்:
நூலின் அமைப்புகையேடு வடிவில் அமைந்த இச்சுருக்க நூலின் அமைப்பு, அதன் முதல் நூலாகிய கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் என்னும் பெரிய நூலின்படியே உள்ளது. மூல நூலில் உள்ள பிரிவுகள் இக்கையேட்டிலும் உள்ளன. ஆயினும் கையேடு வினா-விடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடைப் பகுதியின் ஓரத்திலும் மூல நூலின் பகுதி எண்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு, விரிவான விளக்கம் அறிய விரும்புவோர் மூல நூலைப் பார்த்துக்கொள்ள வழியாகிறது. வினா-விடை முறைஇக்கையேடு வினா-விடை முறையில் அமைந்திருப்பதால், மறைக்கல்வி வகுப்பில் பயன்படுத்துவது எளிதாகிறது. நூல் முழுவதிலும் 598 வினாக்களும் அவற்றிற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. மூல நூலில் உள்ளதுபோலவே, இக்கையேட்டிலும் நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை:
இணைப்புகளும் தொகுப்பு அட்டவணையும்இக்கையேட்டில் உள்ள ஒரு சிறப்புக் கூறு அதில் அடங்கியுள்ள இணைப்புகளும் தொகுப்பு அட்டவணையும் ஆகும். இரு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. "பொதுச் செபங்கள்" என்னும் முதல் இணைப்பில் கத்தோலிக்க மக்கள் நடுவே பொதுவாக வழக்கத்தில் உள்ள இறைவேண்டல்கள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் இணைப்பில் "கத்தோலிக்க நம்பிக்கையின் வாய்பாடுகள்" வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,
போன்றவற்றைக் குறிப்பிடலாம். அகரவரிசையில் அமைந்த தொகுப்பு அட்டவணை மிக்க பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. நூலில் உள்ள 598 வினா-விடைகள் தொடர்பான முக்கிய சொற்கள் இந்த அட்டவணையில் உள்ளதால், அவை வருகின்ற வினா-விடைப் பகுதியை எளிதாகக் கண்டுகொள்ள முடிகிறது. விவிலியப் பகுதிகளும் திருச்சபைத் தந்தையர் நூற்பகுதிகளும்இந்த ஏட்டில் தரப்படுகின்ற விடைகளுக்கு அடிப்படையான விவிலியக் குறிப்புகள் பல உள்ளன. அதுபோலவே, பல இடங்களில் திருச்சபைத் தந்தையர் நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதிகள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. இவ்வாறு, கத்தோலிக்க திருச்சபை வழங்கும் போதனை விவிலியத்திலும் திருச்சபை மரபிலும் ஊன்றியிருப்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. விளக்கப் படங்கள்இக்கையேட்டின் இன்னொரு சிறப்புக் கூறு, அதில் அடங்கியுள்ள படங்கள் ஆகும். இப்படங்கள் மேலைத் திருச்சபை மற்றும் கீழைத் திருச்சபை மரபுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. பிற மொழிகளில் க.தி.ம. சுருக்கம் கிடைக்கும் தளம்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia