கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2006கனடாவின் நடுவண் அரசுக்கான தேர்தல் ஜனவரி 23, 2006 அன்று இடம்பெற்றது. கனடாவின் மத்திய லிபிரல் கட்சியின் சிறுபான்மை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாக முன்வைத்த நம்பிக்கையின்மை தீர்மானம் வெற்றிபெற்றதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தீர்மானம் நவம்பர் 28, 2005 அன்று நிறைவேற்றப்பட்டது. கனடா மத்திய அரசுக்கான தேர்தல் மூலம் கனடாவின் 308 வட்டாரங்களில் இருந்து மத்திய அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றால் அக்கட்சியை அரசமைக்க கனடாவின் ஆளுனர் அழைப்பார். ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறா சந்தர்ப்பத்தில் கூட்டணி ஆட்சிக்கோ, அல்லது சிறுபான்மை ஆட்சிக்கோ சந்தர்ப்பம் இருக்கும். ஆட்சி அமைக்கும் கட்சியின் தலைவர் கனடாவின் பிரதமர் ஆக பொறுப்பு ஏற்பார். இவ்வழமைக்கு அமைய கனடா மரபுசார்பு கட்சியை சேர்ந்த சிரீபன் கார்ப்பர் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார். தேர்தல் முடிவுகள்
தேர்தலில் பங்குபெற்ற கட்சிகள்இத் தேர்தலில் பின்வரும் மூன்று முக்கிய தேசிய கட்சிகள் பங்கு வகித்தன.
இவை தவிர கியுபெக் மாகனத்தின் பிரிவான்மையை முன்நிறுத்தும், ஆனால் கனடாவின் மத்திய அரசியலில் பங்குபெறும் பார்ட்டி க்குயூபெக்வா (க்குயூபெக்வா கட்சி) முக்கியத்துவம் பெற்றது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வழங்கிய கிறீன் பாட்டி அல்லது கனடா பசுமை கட்சி இத்தேர்தலில் 308 வட்டாரங்களிலும் உறுப்பினர்களை நிறுத்தியது. இவை தவிர மிறவான கட்சி, பொதுவுடமைக் கட்சி, லெனின் கட்சி போன்ற சிறு குழு கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் பங்குபெற்றார்கள்.
தேர்தல் 2006 முக்கிய விடயங்கள்
தேர்தல் தினம்: ஜனவரி 23, 2005
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia