கன்னியர் களிகன்னியர் களி (மலையாளம்: കന്നിയാർ കളി) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் மற்றும் சிற்றூர் வட்டத்தில் கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற நடனமாகும். விஷு என அழைக்கப்படும் மலையாள வடப்பிறப்புக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது நிகழ்த்தப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கும் வெலா எனப்படும் கிராமப்புற திருவிழாக் காலங்களில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. கன்னியர் களி நாயர் சமூக மக்களால் கொண்டாடப்படும் ஓர் அறுவடைத் திருவிழா ஆகும். [1] இந்த நடனம் கன்னியர் களி எனப்பெயரிடப்பட்டிருந்தாலும், கண்ணகி வழிபாட்டுடன் எந்த தொடர்பும் இல்லை. [2] இங்கு கன்னியர் என்பது கன்னித்தன்மை உடையவர்களைக் குறிக்கிறது. கன்னியர் களி நடனத்திற்கும் கேரளாவின் உண்மையான ஜோதிடர்களின் சமூகமான கனியர் சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையதில்லை.[3] நடனம்இந்த நடனம் இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிகழ்த்தப்பட்டு விடியற்காலையில் முடிவடைகிறது. தொடர்ச்சியாக நான்கு இரவுகள் நடத்தப்படுகிறது. சில கிராமங்களில் இது தொடர்ச்சியாக மூன்று இரவுகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. ஒவ்வொரு இரவும் சமூகத்தின் ஆண்கள் கோயில்களில் கூடி, வட்டக்களி (வட்டக்களி என்றால் வட்ட வட்ட நடனம் என்று பொருள்) என்ற தாள வட்ட நடனத்தை நிகழ்த்துவதன் மூலம் நடனங்கள் தொடங்குகின்றன. வட்டக்களி 'புரட்டு’ எனப்படும் [4] நடனவடிவத்துடன் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. அதாவது புரட்டு என்றால் பரிகாசம் என்று பொருள். புரட்டுக்கு நிலையான வடிவம் இல்லை, ஒவ்வொரு புரட்டும் தோராயமாக ஒரு மணி நேரம் நீடிக்கும். புரட்டு இடைக்கால கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சாதிகள், பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் சமூக பழக்கவழக்கங்களைச் சித்தரிக்கிறது. புரட்டு பன்முக சாதிகள் மற்றும் பழங்குடியினரைச் சித்தரிப்பதால், பல்வேறு புரட்டுகளிலும் வெவ்வேறு உடைகள், நடனம் மற்றும் வெவ்வேறு இசைப்போக்குகள் கொண்ட பாடல்கள் உள்ளன. பழங்குடியினர் அல்லது போர்வீரரைச் சித்தரிக்கும் சில புரட்டுகளில் குச்சிச் சண்டைகள் மற்றும் தற்காப்புக் கலை இயக்கங்களை ஒத்த நிகழ்ச்சிகள் உள்ளன, அதேசமயம் வேறு சில புரட்டுகள் மெதுவான தாள இயக்கங்களைக் கொண்டுள்ளன. சில புரட்டுகள் நகைச்சுவையுடன் தொடர்புடையன. நீண்ட காலமாக பிரிந்து வாழும் கணவன் மற்றும் மனைவி மீண்டும் இணைந்த ஒரு காட்சியை சித்தரிப்பதாகவும் உள்ளன. [5] கன்னியர் களி நடனமானது கோயில் அல்லது அதன் வளாகத்தின் முன் அமைந்துள்ள பந்தல் எனப்படும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட சதுர மேடையில் நிகழ்த்தப்படுகிறது. இதன் மையத்தில் ஒளிரும் விளக்கொன்று வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பந்தலானது ஒன்பது தூண்களால் தாங்கப்படும் கூரையைக் கொண்டிருக்கும். பாடகர்கள் மேடையின் மைய நிலையை ஆக்கிரமித்து விளக்கினைச் சுற்றியிருக்க, நடனக் கலைஞர்கள் பந்தலின் சுற்றளவில் வட்ட வடிவத்தில் நடனமாடுகிறார்கள். பாடல்கள் பெரும்பாலும் மலையாள மொழியில் உள்ளன மற்றும் சில புரட்டுகளில்ல் பாடல்கள் பாடப்படுகின்றன. அதில் தமிழின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. கன்னியர் களி நடனத்துடன் எலதாளம், செண்டா மற்றும் செங்கலம். ஆகிய கருவிகள் வாசிக்கப்படுகின்றன. மட்டாலம் என்பது வட்டக்களியுடன் சேர்ந்து ஆடப்படும் நடனமாகும். கன்னியர் களியில் பெண்கள் பங்கேற்பதில்லை. முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்பாளர்களாக இருப்பார்கள். பெண்பாத்திரங்களைக் குறிக்க உடலின் குறுக்கே ஒரு ஆடையுடன், உடல் மொழி மற்றும் பெண்களைப் பேசும் முறையைப் பின்பற்றி நடனம் நிகழ்த்தப்படுகிறது. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia