கருக்கால மது அருந்துதல் கோளாறு
கருக்கால மது அருந்தல் கோளாறுகள் (Fetal alcohol spectrum disorders); என்பது கருத்தரிப்புகாலத்தில் தாய் மது அருந்துவதால் கருவுக்கு ஏற்படக்கூடிய நிலைமைகளின் குழு ஆகும். இதன் சிக்கல்களில் பிறக்கும் குழந்தைக்கு அசாதாரண தோற்றம், குறுகிய உயரம், குறைந்த உடல் எடை, சிறிய தலை , குறைந்த ஒருங்கிணைப்பு, குறைந்த புத்திசாலித்தனம், நடத்தை பிரச்சினைகள் மற்றும் கேள்விக் குறைபாடு அல்லது பார்வைக் குறைபாட்டில் சிக்கல்கள் ஆகியவை இருக்கலாம்.[2] பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி பயிலும் பொழுது பள்ளியில் சிக்கல், சட்ட சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள நடத்தைகளில் பங்கேற்பது மற்றும் ஆல்கஹால் அல்லது பிற மருந்துகளில் சிக்கல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.[7] இந்த நிலையின் மிகக் கடுமையான வடிவம் கரு ஆல்கஹால நோய்க்குறி ( FAS ) என அழைக்கப்படுகிறது. பிற வகைகளில் பகுதி கரு ஆல்கஹால் நோய்க்குறி ஆல்கஹால் தொடர்பான நரம்பியல் வளர்ச்சி கோளாறு (ஏ.ஆர்.என்.டி) மற்றும் ஆல்கஹால் தொடர்பான பிறப்பு குறைபாடுகள் (ஏ.ஆர்.பி.டி) ஆகியவை அடங்கும்.[1][8] சிலர் FAS ஐ ஒரு நோயறிதலாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள், மற்ற வகைகளைப் பொறுத்தவரை ஆதாரங்கள் முடிவில்லாதவை என்று கருதுகின்றனர்.[9] தாய் கருத்தரித்த காலத்தில் மது அருந்துவதால் கரு ஆல்கஹால் மூளை ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் ஏற்படுகின்றன.[1] அமெரிக்காவின் ஆய்வுகள் கடந்த மாதத்தில் சுமார் 10% கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்தியுள்ளதாகவும், கர்ப்ப காலத்தில் 20% முதல் 30% வரை ஒரு கட்டத்தில் குடித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி அமெரிக்க பெண்களில் சுமார் 3.6% பேர் குடிப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.[10] சிக்கல்களின் ஆபத்து நுகரப்படும்அளவு, நுகரும் எண்ணிக்கை இடைவெளி,கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எப்போது உட்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தது. வயதான தாய், புகைபிடித்தல் மற்றும் மோசமான உணவு ஆகியவை பிற ஆபத்து காரணிகளில் அடங்கும்.[11][12] கர்ப்ப காலத்தில் அறியப்பட்ட பாதுகாப்பான அளவு அல்லது குடிக்க பாதுகாப்பான நேரம் என எதுவும் இல்லை.[13] சிறிய அளவிலான ஆல்கஹால் குடிப்பதால் குழந்தையின் முகத்தில் அசாதாரணங்கள் ஏற்படாது, மாறாக இது நடத்தைச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஆல்கஹால் முளைக்கான இயற்கையாக அமைந்துள்ள இரத்தத்தடையைக் கடக்கிறது. மேலும் கருவில் வளரும் குழந்தையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது.[14] நோய் கண்டறிதல் என்பது நபரின் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. கருத்தரிப்புக் காலத்தில் மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் கருக்கால மது அருந்துதல் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.[4] இந்த காரணத்திற்காக, மருத்துவர்கள் கருத்தரித்த காலத்தில் அல்லது கருத்தரித்தலுக்கான முயற்சியில் இருக்கும்போதும் மது அருந்துதல் வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.[15][16] அவ்வாறு மது அருந்துதவதால் குழந்தைக்கு ஏற்படும் இந்த கோளாறு நிலை அதன் வாழ்நாள் முழுதும் நிரந்தரமானது என்றாலும், சிகிச்சையானது விளைவுகளை மேம்படுத்தலாம்.[1] பெற்றோர்-குழந்தை இடையேயான தொடர்பு சிகிச்சை, குழந்தைகளின் நடத்தையை மாற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் மருந்துகள்[5] ஆகியவை இதற்கான சிகிச்சை முறைகளில் இடம்பெற்று இருக்கலாம்.[3] அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் 1% முதல் 5% மக்கள் இந்த கருக்கால மது அருந்துதல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 0.2 முதல் 9 வரையான குழந்தைகளுக்கு இந்த கருவில் மது அருந்துவதால் ஏற்படும் கோளாறு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில், சில கணக்கெடுப்புகளில் இந்த எண்ணிக்கை 9% விட அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என பண்டைய காலங்களிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளன.[8] இக்கோளாறு உடைய (FAS) உடைய ஒரு குழந்தையின் வாழ்நாள் செலவு அமெரிக்காவில் 2002 இல், $ 2,000,000 ஆகும்.[6] கருக்கால ஆல்கஹால் நோய்க்குறி என்ற சொல் முதன்முதலில் 1973 இல் பயன்படுத்தப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia