கருங்காடு
இக்காடு மேற்கு ஜெர்மனியின் வட மேற்குப் பகுதியின் பாடென் வர்டம்பர்க் நிலப்பகுதியில் ஸ்வார்ஸ் வால்ட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கருங்காடு 160 கிலோ மீட்டர் நீளமும் வடக்கில் 23 கிலோ மீட்டர் அகலமும் தெற்கில் 61 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த பரப்பு 5180 சதுர கிலோ மீட்டர் ஆகும். இக்காட்டில் பெரும்பாலான பகுதிகளில் வட்ட வடிவ உச்சிகளோடு கூடிய மலைகள் உள்ளன. கருங்காட்டில் வட பகுதியில் சிவப்பு மணல், கற்கள் அமைந்த காட்டுப் பகுதிகள் உள்ளன. தெற்கில் உள்ள குறுகலான மலைகளற்ற பகுதிகளில் சுண்ணாம்புக்கல் அமைந்த வளமான பகுதி உள்ளது. மலைப் பகுதியில் உள்ள மாவட்டங்களின் காலநிலை சரிவர இல்லாமையால் கடின தானியங்களே பயிர் செய்யப்படுகிறது. கருங்காட்டில் ஃபர், பீச், ஓக் போன்ற பொருளாதார சிறப்பு வாய்ந்த பல பயன்படும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளமையால் அவை பள்ளத்தாக்கிற்கு கொண்டு வரப்பட்டு பல அளவுள்ள பலகைகளாகவும், கட்டைகளாகவும், சட்டங்களாகவும் அறுக்கப்பட்டு அவற்றில் சுவர் கடிகாரங்கள், கைக் கடிகாரங்கள், விளையாட்டுச் சாமன்கள், பல வகை இசைக் கருவிகள் செய்யப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றால் இங்குள்ள மக்களின் பொருளாதாரன் வளன் பெற்று விளங்குகிறது.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia