கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும். ![]() ![]() ![]() ![]() முக்கியத்துவம்மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்கு, சமூக மாற்றத்துக்குகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மக்களாட்சிக்கு, அரசில், முடிவெடுத்தலில் மக்களின் பங்களிப்புக்கு மிகவும் அவசியமானது. தகவலை, கருத்துக்களை, எண்ணக்கருக்களை சுதந்திரமாக ஆக்க, அறிய, பகிர உரிமை இருந்தாலே அரசில் பங்களிப்பு, மக்களாட்சி, பொறுபாண்மை சாத்தியமாகிறது.[1] எங்கு எல்லா விதமான தகவல்கள், கருத்துக்கள், சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆயப்பட்டு, எல்லோடைய கருத்துக்கும் மதிப்புத் தந்து, எதிர்க்கருத்துக்களோடு பரிசோத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ, அந்த முடிவுகள் சிறந்தனவையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.[2] சீனா, கியூபா, வட கொரியா, பார்மா, சவூதி அரேபியா என எங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லையோ, அங்கு மக்களாட்சி இல்லை. அரசை, சமயத்தை, படைத்துறையை, சமூகக் கட்டமைப்புகள் என பலவற்றை விமர்சிப்பதற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் ஆகும். இந்த விமர்சனங்களால்தான் திருத்தங்கள், மாற்றங்கள் சாத்தியப்படுகின்றது. தன்மதிப்புக்குஒவ்வொரு தனி மனிதரும் தனது கருத்தை வெளிப்படுத்த விரும்புவது இயல்பானது. அந்தச் சுதந்திரம் மனிதருக்கு தன்மதிப்பைத் தருகிறது. அந்த மனிதரின் கூற்றை, பங்களிப்பை சமூகம் பெற்றுக் கொள்ள இசைவு கொடுக்கிறது. இதனால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மனிதனின் பூரணத்துவத்துக்கு அடிப்படையான உரிமையாக பார்க்கப்படுகிறது.[3] படைப்பாக்கத்துக்குஓவியம், திரைப்படம், இசை, எழுத்து என பலதரப்பட்ட கலைகளில் வெளிப்பாட்டுக்கு கருத்துச் சுதந்திரம்தான் அடுத்தளமாக உள்ளது. அறிவியலில், தொழிற்துறையில் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை பகிர்வதற்கு கருத்துச் சுதந்திரம்தான் அடுத்தளாக உள்ளது. உண்மையை அறியயோன் மில்டன் உண்மைய அறிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் என்ற நோக்கில பல வாதங்களை முன்வைக்கிறார். பல்வேறு பார்வைகளில் ஒன்று அலசப்பட்டே, உண்மையை நோக்கிய தேடல் அமைகிறது. அனைத்து தகவல்கள்ளும் முன்வைக்கப்படும்போது, ஒரு திறந்த போட்டியில் உண்மை பொய்மை வெற்றி கொள்ளும் என்கிறார். ஒரு தேசத்தின் ஒற்றுமை பல வேறுபாடுகள் உடைய தனிமனிதர்களை கலப்பதன் மூலமே சாத்தியம். இது மேலிருந்து ஒற்றைப்படையாக (homogeneity) அமுலாக வல்ல ஒரு அம்சம் அல்ல. சட்ட உரிமைகள்அனைத்துலக உறுதிப்பாடுகள்கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை பல்வேறு மனித உரிமைக் ஆவணங்கள் ஊடாக அனைத்துலகச் சட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்யின் 19 ஆவது பிரிவும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின் 10 ஆவது பிரிவும் இத்தகைய ஆவணங்களுள் அடங்கும். எனினும் பல நாடுகளில் இது முறையாக நிறைவேற்றப்படுவதில்லை. பிரிவு 19
அமெரிக்கா
- ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு கனடாஉரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் பினவரும் அடிப்படைச் சுதந்திரங்களை வரையறை செய்கிறது:
எல்லைகள்
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர மீறல்கள்கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இலங்கை, சீனா, வட கொரியா, கியூபா, சவூதி அரேபியா, ஈரான், துருக்கி, உருசியா, பாகிசுத்தான், சூடான் என பல நாடுகளில் மிக மோசமாக மீறப்படுகிறது. குறிப்பாக மக்களாட்சி இல்லாதா நாடுகளில், அல்லது நலிவுற்ற நாடுகளில் மிக மோசமாக மீறப்படுகிறது. இந்தியாவில் மிக கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. எ.கா இந்தியாவில் திரைப்படத் தணிக்கை, அரசியல் பேச்சுத் தணிக்கைய் ஆகியவை உள்ளன. ஊடக சுதந்திரச் சுட்டெண், தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் போன்ற சுட்டெண்கள் எங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரங்கள் மீறப்படுகின்றது என்பதை மேலும் காட்டுகின்றன. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia