கருப்புக் குறுமீன்கருப்புக் குறும்மீன் (black dwarf) அல்லது கருங்குறளி என்பது கோட்பாட்டியலான விண்மீன் எச்சம் ஆகும். குறிப்பாக, வெண் குறுமீன் ஒளியோ, வெப்பமோ வெளியிட முடியாதபடி போதுமான அளவு குளிர்ந்ததும் உருவாகும் இறுதிக் கட்ட விண்மீன் வகையாகும். இந்நிலையை வெண் குறுமீன் அடைய எடுத்துக் கொள்ளும் கால இடைவெளி நிகழ்கால புடவியின் அகவையினும் கூடுதலாக உள்ளதால், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகளாக அமைவதால், தற்போது கருப்புக் குறுமீன் ஏதும் நிலவ வாய்ப்பில்லை. என்றாலும் மிகக் குளிர்ந்த வெண்குறுமீனின் வெப்பநிலை புடவியின் அகவையைக் கணிப்பதற்கான ஒரு நோக்கீட்டு வரம்பாக அமைகிறது. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட ஒரு வெண் குறுமீன் தனது வெப்பநிலைச் சூழலில் தன்னால் எரிக்க முடிந்த வேதித் தனிமங்களை எல்லாம் எரித்த பிறகு நிலவும் முதன்மை வரிசை விண்மீனாகும்.[1] பிறகு நிலவுவது வெப்பக் கதிர்வீச்சால் மெதுவாகக் குளிரும் அடர்த்திமிக்க மின்னன் அழிவெதிர்ப்ப்ப் பொருண்மம் ஆகும். இதுவும் அறுதியில் கருப்புக் குறுமீன் ஆகிவிடும்.[2][3] வரையறைப்படி, கருப்புக் குறுமீன்கள் கதிர்வீச்சேதும் வெளியிட முடியதென்பதால் அவை நிலவினும் கண்டுபிடிப்பது அரிதே. அவற்றை ஈர்ப்புத் தாக்கம் கொண்டு மட்டுமே அறியலாம்.[4] எம் டி எம் வான்காணகத்தின் 2.4 மீ தொலைநோக்கியால் வானியலாளர்கள் 3900 K வெப்பநிலையினும் குறைந்த வெப்பநிலையுள்ள MO வகைசார்ந்த பல வெண் குறுமீன்களைக் கண்டறிந்துள்ளனர். இவை 11 முதல் 12 பில்லியன் ஆண்டு அகவையினவாக மதிப்பிடப்பட்டுள்ளன.[5] மிக நெடிய எதிர்கால விண்மீன்களின் படிமலர்ச்சி, அவை நிலவப்போகும் இயற்பியல் நிலைமைகளைச் சார்ந்தமையும் என்பதாலும் அத்தகைய நிலைமைகளை இப்போது முன்கணிக்க முடியாதென்பதாலும், அதாவது கரும்பொருண்மத் தன்மை, வாய்ப்புள்ள முன்மி சிதைவு வீதம் போன்றவற்றை முன்கணிக்க முடியாதென்பதாலும், எவ்வளவு கால இடைவெளியில் வெண் குறுமீன்கள் கருப்பாகும் எனத் துல்லியமாக அறிய இயலவில்லை.[6], § IIIE, IVA. பாரோவும் டிப்ளரும் வெண்குறுமீன்கள் 5 K வெப்பநிலைக்குக் குளிர 1015 ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டனர்;[7] என்றாலும் மெல்விசையோடு ஊடாட்டம் புரியும் அடர்துகள்கள் இருந்தால், இந்த துகள்களின் ஊடாட்டம் இவ்வகைக் குறுமீன்களைத் தோராயமாக 1025 ஆண்டுகளுக்குச் சூடாக வைத்திருக்கும்.[6], § IIIE. மேலும் முன்மிகள் நிலைப்பற்று நிலவினால், அப்போதும் வெண் குறுமீன்கள் இம்முன்மிகள் தம் சிதைவால் வெளியிடும் ஆற்றலால் மேலும் கூடுதல் சூட்டுடன் இருக்கும். முன்மியின் கருதுகோள்நிலை வாழ்நாளான 1037 ஆண்டுகட்கு, ஆடம்சும் இலாலினும் முன்மிச் சிதைவு ஒரு சூரியப் பொருண்மையுள்ள வெண்குறுமீன்களின் விளைவுறு மேற்பரப்பு வெப்பநிலையைத் தோராயமாக 0.06 K அளவுவரை உயர்த்தும் எனக் கணக்கிட்டனர். இவ்வெப்பநிலை குளிர்நிலையைக் குறித்தாலும் ஆனால் இது அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு வெப்பநிலையை விட சூடானதாக எதிர்காலத்தில் 1037 ஆண்டுகட்கு நிலவும் எனக் கருதப்படுகிறது.[6], §IVB. நீரக எரிப்பைப் பேணவல்ல அணுக்கருப் பிணைவை நிகழ்த்தவியலாத 0.08 பகுதிச் சூரியப் பொருண்மையுள்ள துணை உடுக்கணப் பொருள்களுக்குக் கருப்புக் குறுமீன்கள் எனும் பெயர் முதலில் இடப்பட்டது.[8][9] இவ்வகைப் பொருள்களுக்கு இப்போது பழுப்புக் குறுமீன்கள் என்ற பெயர் 1970 களில் வழங்கலானது.[10][11] கருப்புக் குறுமீன்கள் எனும் பெயரை கருந்துளைகளுடனோ நொதுமி விண்மீன்களுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது. மேற்பரப்பும் வளிமண்டலமும்தம் உயர் ஈர்ப்பினால் கருப்புக் குறுமீன்களின் மேற்பரப்பு மலைகள் தவிர்த்து மற்றபடி போன்ற மேற்பொருக்கின்றிச் சீராக அமையும். தண்ணீர் போன்ற ஆவியாகும் பொருட்கள் ஏதுமின்றி உலர்ந்திருக்கும். இவற்றின் வளிமண்டலம் முழுவது கரிமம் நிறைந்திருக்கும். முகில்கள் ஏதும் இருக்காது.வளிமண்டலம் மெலிந்துள்ளதால் வானிலை இயல்பேதும் நிலவாது.[சான்று தேவை] சூரியனின் எதிர்காலம்ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் தன் அகட்டில் எல்லியப் பிணைவை நிறுத்திவிட்டுபுர அடுக்குகளை கோளாக்க வளிம முகில் வட்டாக வெளியே வீசும்போது அது வெண்குறுமீனாக மாறும்.அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அது ஒளி ஏதும் காலாது (வெளியிடாது).. பிறகு, அதை ந்ம்மால் கண்வழி பார்க்க முடியாது. ஈர்ப்பு விளைவை மட்டுமே கொண்டிருக்கும். கருப்புக் குறுமீனாக சூரியன் குளிர ஆகுங்காலம் தோரயமாக, 1015 (1 குவாட்ரில்லியன்) ஆண்டுகள் ஆகும். மெல்விசை ஊடாட்ட அடர்துகள்கள் இருந்தால் ஒருவேளை இதற்கும் மேலான கால அளவும் இதற்குத் தேவைப்படலாம். [சான்று தேவை] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia