கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 65. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரணி, போளூர், அணைக்கட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர். இத்தொகுதியில் கலசப்பாக்கம் வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம் மற்றும் , ஜமுனாமரத்தூர் வட்டத்தின் 112 ஊராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சி இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.[2] தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு, செண்பகத்தோப்பு,அனந்தபுரம், அமிர்தி, நீப்பளாம்பட்டு, காணமலை, நம்மியம்பட்டு, சீங்காடு,மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு, கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்ட்வரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம்,பட்டியந்தல், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.
வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூஉர்செங்கம், உண்ணாமலைபாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள், புதுப்பாளையம் (பேரூராட்சி)[3]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை10.01.2018 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)யில் ஆண் வாக்காளர்கள் 112506 பேரும், பெண் வாக்காளர்கள் 114971 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 8 பேரும் மொத்தம் 227485 பேர் உள்ளனர்.[1]
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia