கல்முனை
கல்முனை (Kalmunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் தமிழர், சிங்களவர்,முஸ்லிம், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும். கல்முனை தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரதேசங்கள்கல்முனை பிரதேசத்தில் 8 ஊர்களை உள்ளடக்கியது.
கல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் தரவைப் பிள்ளையார் கோயில் வீதி வரை ஆகும். நிருவாக அமைப்புபிரதேச செயலாளர் பிரிவுகள்
கல்முனை மாநகர சபை2018 கலப்பு தேர்தல் மூலம் 41 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) 12 ஆசனங்களையும், சாய்ந்தமருது சுயேச்சைக் குழு (இல 3) 9 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும், ஏனைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ், சுயேச்சைக் குழுக்கள் 1, 2 என்பன தலா ஒவ்வொரு ஆசனங்ளையும் பெற்றிருந்தன. கல்முனை நகர பகுதியான கல்முனை 12ம் வட்டாரம் மற்றும் 11ம் வட்டாரம் ஆகியவற்றில் [2] தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ஐதேக) கல்முனை நகர முதல்வர் பதவியையும் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதி மேயர் பதவியையும் பகிர்ந்து சபையை ஆட்சி அமைத்தனர். மக்கள் தொகைதொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2011 தரவுகளின் படி, கல்முனை மாநகரத்தின் மக்கள்தொகை வருமாறு:
மூலம்: சனத்தொகை மற்றும் வீடுகளுக்கான புள்ளிவிபரம் -2011 முக்கியத்துவம்கல்முனை 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலையால் நேரடியாகத் தாக்கப்பட்டு உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia