கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரம்
கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில் (Kalyana Venkateswara Temple, Srinivasamangapuram) என்பது சீனிவசமங்கபுரத்தில் அமைந்துள்ள பழங்கால வைணவ கோயில் ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த கோயில் விஷ்ணுவின் ஒரு வடிவமான வெங்கடாசலபதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடவுள் கல்யாண வெங்கடேசுவரர் என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் இந்த கோயில் தேசிய முக்கியத்துவத்தின் பண்டைய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.[2] நிர்வாகம்இந்த கோயில் 1967 முதல் 1981 வரை இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டிலிருந்தது. 1981ஆம் ஆண்டில் இந்த கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த கோவிலைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (தி.தி.தே.) நிர்வகித்து வருகின்றது.[1] கோவிலில் தெய்வங்கள்இந்தக் கோயிலில் இருக்கும் முதன்மைத் தெய்வம் வெங்கடாசலபதி, இவர் கல்யாண வெங்கடேசுவரர் என வணங்கப்படுகிறார். இவர் மேற்கு நோக்கி இடப்புற இரண்டு கைகளில் ஒன்று வரத முத்திரையுடனும் மற்றொன்றில் சக்ராய்தத்தினை தாங்கியும், வலது கை ஒன்றில் காதி முத்ராவுடன் சங்கினை பிடித்திருக்கின்றார். இந்த கோவிலில் இலட்சுமி நாராயண சுவாமி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆகிய தெய்வங்களுக்கான சன்னிதிகளும் உள்ளன. முக்கியத்துவம்திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலுக்கு அடுத்ததாக இந்த கோயில் புனிதமாகக் கருதப்படுகிறது.[1] இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் இந்த கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia