கவரப்பட்டு சந்திர சேகரேசுவரர் கோயில்

சந்திரசேகரேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கவரப்பட்டு
கோயில் தகவல்
மூலவர்:சந்திரசேகரேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கவரப்பட்டு சந்திர சேகரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் கவரப்பட்டு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சந்திர சேகரேசுவரர் உள்ளார். இறைவி காமாட்சியம்மன் ஆவார். [1]

அமைப்பு

அருணாசலேசுவரர், காசி விசுவநாதர், விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சிவன் கோயிலான இங்கு லட்சுமி நாராயணப்பெருமாளும், ஆஞ்சநேயரும் உள்ளனர். நவக்கிரகங்கள் தம்பதிசமேதராய் காட்சியளிக்கின்றனர். [1]

விழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya