காங்கோ ஆறு
![]() காங்கோ ஆறு (Congo River) ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் பாயும் ஒரு பெரிய ஆறு ஆகும். இதை முன்னர் சயர் ஆறு (Zaire River) என்றும் அழைத்தனர். ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகளில் நைல் ஆற்றுக்கு அடுத்த மிக நீளமான ஆறு காங்கோ ஆறாகும். இதேபோல அதிகமான கன அளவு நீரை கொண்டு செல்லும் ஆறுகளில் அமேசான் ஆற்றுக்கு அடுத்ததாக மிகப்பெரிய ஆறு என்ற பெருமையும், உலகிலேயே அதிக ஆழம் கொண்ட ஆறு (720 அடி) என்ற பெருமைகளும் இந்த ஆற்றுக்கு உண்டு[1]. காங்கோ-சாம்பேசி நதியின் மொத்த நீளம் 4,700 கி.மீ. (2,920 மைல்) ஆகும். வெளியேற்றும் நீரின் அடிப்படையில் இது ஒன்பதாவது நீளமான ஆறு என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. சாம்பேசி லுவாலாபா ஆற்றின் ஒரு துணையாறாகக் கருதப்படுகிறது. லுவாலாபா ஆறு1,800 கி.மீ. நீளத்துடன் போயோமா அருவியின் நீரோட்டத்திற்கு எதிராக பாய்கிறது. காங்கோ ஆறு மொத்தமாக 4370 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக அமைந்து, பூமத்திய ரேகையை இரண்டு இடங்களில் சந்திக்கிறது [2]. காங்கோ வடிநிலத்தின் பரப்பு 4மில்லியன் கிலோமீட்டர்2 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பில் இந்த அளவு 13% ஆகும். பெயர்காங்கோ ஆறு என்ற பெயர் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்திருந்த காங்கோ பேரரசு என்ற பெயரில் இருந்து தோன்றியுள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் இப்பேரரசு எசிகோங்கோ எனப் பெயரிடப்பட்டிருந்தது[3]. காங்கோ இனக்குழுவைச் சேர்ந்த பாண்டு இன மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காங்கோ பேரரசுக்குத் தெற்கே 1535 ஆம் ஆண்டில் காகாங்கோ என்று பெயரிடப்பட்ட ஒரு பேரரசும் இருந்துள்ளது. ஆபிரகாம் ஒர்டெலியசு தனது 1564 ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு நகரத்தை மணிகாங்கோ என்று பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளார் [4]. காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரான சயர் என்ற பெயர் கிகோங்கோ என்ற போர்த்துகீசிய தழுவலில் இருந்து வந்தது ஆகும். நதியை விழுங்கும் ஆறு என்ற பொருள் கொண்ட nzadi o nzere என்ற சொற்றொடரின் ஒரு பகுதியான nzere என்ற சொல் நதியைக் குறிக்கிறது [5]. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்நதி சயர் நதி என்று அறியப்பட்டது. கொங்கோ என்ற பெயர்18 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிப் பயன்பாட்டில் படிப்படியாக சயர் என மாற்றப்பட்டது, 19 ஆம் நூற்றாண்டு புத்தகங்களில் காங்கோ என்ற பெயர் விரும்பப்பட்ட ஆங்கில பெயராக இருந்தது, இருப்பினும் சயர் அல்லது சயரியசு என்ற பெயர் மக்களால் பயன்படுத்தப்பட்ட பெயராகப் பொதுவாகக் காணப்படுகிறது [6]. காங்கோ சனநாயகக் குடியரசு மற்றும் காங்கோ குடியரசு ஆகிய பெயர்கள் இதன் அடிப்படையிலேயே உருவாகின. பெல்சிய காங்கோவிடமிருந்து 1960 களில் காங்கோ சுதந்திரம் பெற்றது. 1971-1997 இல் உருவாக்கப்பட்ட சயர் என்ற மாநிலத்தின் பெயரும் இந்நதியின் பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய பெயரே அடிப்படையாக அமைந்தது. காங்கோ வடிநிலம்காங்கோ வடிநிலம் 4,014,500 சதுர கிலோமீட்டர் (1,550,000 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியுள்ளது[7]. காங்கோ நதி முகத்துவாரத்தின் வழியாக வினாடிக்கு 23,000 முதல் 75,000 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 41000 கனமீட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[7]. தென் ஆப்பிரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு அடுத்த இரண்டாவது பெரிய மழைக்காடாக உள்ள காங்கோ வனப்பகுதியில் காங்கோ ஆறும் அதன் துணை ஆறுகளும் பாய்கின்றன. அமேசானுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீரோட்டமும், அமேசான், பிளேட்டு நதிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய வடிநிலப் பகுதியையும் காங்கோ ஆறு பெற்றுள்ளது. மேலும், உலகின் மிக ஆழமான நதிகளில் காங்கோ நதியும் ஒன்றாகத் திகழ்கிறது [1][8]. ஏனெனில் இவ்வடிநிலப்பகுதி பூமத்தியரேகைக்கு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. காங்கோ ஆற்றின் ஏதாவது ஒரு பகுதி எப்போதும் மழைக் காலத்தைச் சந்தித்துக் கொண்டே இருப்பதால் ஆற்றின் வெள்ளம் எப்போதும் நிலையாகவே உள்ளது [9]. கிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் மற்றும் மேட்டுநிலங்கள், டாங்கனிக்கா ஏரி, மவேறு ஏரி போன்றவை காங்கோ ஆற்றுக்கான நீர் ஆதாரங்களாக உள்ளன. சாம்பியாவில் பாயும் சாம்பேசி ஆறு பொதுவாக காங்கோவின் நீர் ஆதாரமாகக் கருதப்படுகிறது, பெரிய மத்திய-ஆப்பிரிக்க மாகாணத்தின் தனித்துவமான நிலக்கூறியல் பிரிவுகளில் ஒன்றான காங்கோ ஆற்று வடிநிலம், ஆப்பிரிக்காவின் அமைந்துள்ள ஒரு பேரளவு நிலக்கூற்றுப் பகுதியாகும். துணையாறுகள்![]() ![]() காங்கோவின் கீழ்பகுதியிலிருந்து மேற்பகுதியை நோக்கி துணை ஆறுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
காங்கோவின் மையப்பகுதியுடன் தொடர்புடைய துணையாறுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
கசாய் ஆற்றுடன் குவாமவித்தில் கலக்கும் பிமி ஆறு*[10].
மேற்புற காங்கோ கிசன்கானிக்கு அருகிலுள்ள போயோமா அருவியின் எதிர்நீரோட்டத்தை லுவாலாபா ஆறு என்கின்றனர்.
பொருளாதார முக்கியத்துவம்![]() ![]() லிவிங்சுடன் நீர்வீழ்ச்சி கடலில் இருந்து உள்நுழைவதை தடுக்கிறது என்றாலும் காங்கோவிற்கு மேலே உள்ள பகுதி முழுவதிலும் குறிப்பாக கின்சாசா மற்றும் கிசங்கனி இடையே பகுதி பகுதியாக நடைபெறுகிறது. சமீபகாலம் வரை சில சாலைகள் அல்லது இரயில் பாதைகளுடன் காங்கோ ஆறும் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக விளங்குகிறது[12]. நீர்மின் திட்டங்கள்ஆப்பிரிக்காவில் காங்கோ ஆறு மிகவும் சக்திவாய்ந்த ஆறு ஆகும். மழைக்காலத்தின் போது காங்கோ ஆற்றிலிருந்து வினாடிக்கு 50,000 கன மீட்டர் (1,800,000 கன அடி) தண்ணீர் அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கிறது. காங்கோ மற்றும் அதன் துணை ஆறுகளில் இருந்து நீர்மின்சாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. உலகளாவிய நீர்வள ஆற்றலில் 13 சதவிகித மின்சாரத்தை மொத்த காங்கோ வடிநிலப்பகுதி அளிக்கமுடியுமென விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இதனால் அனைத்து துணை-சகாரா ஆப்பிரிக்க மின்சக்தி தேவைகளுக்காக போதுமான சக்தியை அளிக்கமுடியும் [13]. தற்சமயம் காங்கோ வடிநிலப்பகுதியில் சுமார் நாற்பது நீர்மின்திட்டங்கள் செயற்படுகின்றன. கின்சாகாசாவிற்கு தென்மேற்கில் உள்ள இன்கா நீர்ழ்ச்சி அணை இவற்றுள் மிகப்பெரியதாகும். முதல் அணை கட்டி முடிக்கப்பட்ட 1970 களின் ஆரம்பத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.[14] 34,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும் ஐந்து அணைகள் கட்டுமானத்திற்காக முதலில் திட்டமிடப்பட்டது. இன்று வரை இரண்டு அணைக்கட்டுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக பதினான்கு விசையாழிகள் இங்கா I மற்றும் இங்கா II என்ற இவ்விரு திட்டங்களில் உள்ளன [13]. பிப்ரவரி 2005 இல், தென் ஆப்பிரிக்கா அரசுக்கு சொந்தமான ஆற்றல் நிறுவனம் எசுகோம், இங்காவின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தது. புதிய அணைகள் கட்டுவது மற்றும் மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்தன. இத்திட்டத்தின் மூலமாக அதிகபட்ச வெளியீடாக 40 கிகாவாட் மின்சாரத்தை அளிக்கும் எனக் கருதப்பட்டது. இது சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையின் மின்னுற்பத்தியைக் காட்டிலும் இரு மடங்கு ஆகும்[15]. இத்தகைய புதிய நீர்மின் திட்டங்களால் ஆறுகளில் காணக்கூடிய பல மீன் இனங்களின் அழிந்து போகும் எனக் கருதப்பட்டது,. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia