காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) என்பது ஒரு கரைசலின் தன்மையை அமிலமா அல்லது காரமா என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள ஐதரசன்(நீர்வளி) அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
காரகாடித்தன்மைச் சுட்டெண்னின் வேதியியல் வரையறை, "ஐதரசன் அயனிகளின் எதிர்மறையான மடக்கை ஆகும்".
இங்கு aH - ஐதரசன் அயனிகள்.
காரகாடித்தன்மைச் சுட்டெண் 0ல் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 °Cல் 7.0 ஆகும், இதை நடுநிலை என்று அழைக்கப்படுகிறது. ஏதேனும் கரைசலில் 7.0 க்கும் கீழ் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் அமிலமாகவும், அல்லது கரைசலில் 7.0 க்கும் மேல் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது.