கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர்
கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் (Carl Friedrich Freiherr von Weizsäcker) (ஜூன் 28, 1912- ஏப்பிரல் 28, 2007) ஒரு செருமானிய இயற்பியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். வெர்னர் ஐசன்பர்கு தலைமையில் செருமனியில் இரண்டாம் உலகப் போரின்போது அணுக்கரு ஆராய்ச்சியில் ஈடுபட்டவருள் நீண்ட வாழ்நாள் கொண்ட உறுப்பினர் ஆவார். அப்போது இவர்கள் தம் முழு விருப்பத்தோடுதான் இவ்வாராய்ச்சியில் குழுவாக ஈடுபட்டு செருமனியில் அணுக்குண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டார்களா என்பது குறித்த விவாதம் இன்னமும் தொடர்கிறது.[சான்று தேவை] வைசாக்கர் குடும்பத்தின் புகழ்வாய்ந்த இவர்,எர்னெசுட்டு வான் வைசாக்கரின் மகன்; மூன்னாள் செருமனியின் குடியரசுத் தலைவரான இரிச்சர்டு வான் வைசாக்கரின் அண்ணன்; இயற்பியலாளரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எர்னெசுட்டு உல்ரிச் வான் வைசாக்கரின் தந்தை; முந்தைய உலக மறைப்பேராயங்களின் மன்றச் செயலாளரான கோறாடு இரெய்சரின் மாமனார். இவர் அணுக்கருப்பிணைவால் சூரியனில் ஆற்றல் உருவாதல் பற்றிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர். இவர்சூரியக் குடும்பக் கோள்களின் உருவாக்கம் குறித்த கோட்பாட்டு ஆய்வில் பெருந்தாக்கம் செலுத்தியுள்ளார். தனது பிந்தைய வாழ்நாளில் இவர் மெய்யியலிலும் அறவியலிலும் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளார். இவர் இவற்றுக்காக, பல பன்னாட்டுத் தகைமைகளை ஈட்டியுள்ளார். விருதுகளும் தகைமைகளும்
சுசீசுவிக்-கோல்சுட்டீனில் உள்ள பார்ம்சுடெட் நகரத்தின் கார்ல் பிரீட்ரிக் வான் வைசாக்கர் பள்ளி இவரது பெயரைத் தாங்கியுள்ளது. வைசாக்கர் இருமுறை இயற்பியல் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப் பட்டார்.[1] Since 2009, the Donors' Association for German Science and the Leopoldina makes a biennial award of €50,000 "Carl Friedrich von Weizsäcker Award" for "outstanding scientific contribution to resolving socially important problems". நூல்களும் பணிகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia