கிமு 479 பொடிடேயா நிலநடுக்கம்
கிமு 479 பொடிடேயா ஆழிப்பேரலை (479 BC Potidaea earthquake) என்பது மனித வரலாற்றில் பதிவான மிகப் பழமையான ஆழிப்பேரலை ஆகும். [1] ஏஜியன் கடலில் ஏற்பட்ட Ms 7.0 நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அகாமனிசியப் பேரரசில் இருந்து படையெடுத்து வந்த பாரசீகர்களிடமிருந்து பொடிடேயாவின் குடியேற்றத்தை இந்த ஆழிப்பேரலை காப்பாற்றியதாக கருதப்படுகிறது. புவி ஒட்டுக்குரிய அமைப்புஏஜியன் கடல் என்பது ஏஜியன் கடல் புவித்தட்டுக்குள்ளும் அதைச் சுற்றியும் சிக்கலான புவிமேலோட்டுப் பேரியக்கத்துடன் தொடர்பு கொண்ட ஒரு நில அதிர்வு செயல்பாடு உள்ள பகுதி ஆகும். ஏஜியன் கடலில் ஏற்படும் நில அதிர்வு என்பது லித்தோஸ்பெரிக் புவித்தட்டின் செயலினால் ஏற்படுகிறது. நிலநடுக்கம்Ms 7.0 நிலநடுக்கம் மசிடோனியாவில் எங்கோ நிலநடுக்க மையத்தைக் கொண்டிருந்தது. [2] ஆழிப்பேரலைகிரேக்கத்தின், பொடிடியா என்ற கடலோர நகரத்தை பாரசீகர்கள் முற்றுகையிட்ட போது, பாரசீகப் படையினர், வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் உள்வாங்குவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றவர்கள், "அதற்கு முன் காணாத ஒரு பெரிய வெள்ளமாக உயர்ந்த அலை" வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் என்று எரோடோடஸ் தெரிவிக்கிறார். திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு பொசைடனின் கோபமே காரணம் என்று எரோடோடஸ் கூறுகிறார். [3] டொரோனியன் வளைகுடாவில் பெரிய ஆழிப்பேரலை வந்தது, இது பொடிடியாவை அழித்தது. [4] குடியேற்றத்ததை ஆக்கிரமிக்க முயன்ற பல பாரசீக கப்பல்களை ஆழிப்பேரலை மூழ்கடித்தது. பல நூறு வீரர்களை மூழ்கடித்து கொன்றது. [5] ஆழிப்பேரலை குறித்த சான்று இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. அதன் தோற்றம் வானிலை விளைவுகள் அல்லது கடலினுள் ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் புயல் ஏற்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடவில்லை. [5] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia