கிம் கி டக் (ஆங்கிலம்: Kim Ki-duk, 김기덕) (20 திசம்பர் 1960 – 11 திசம்பர் 2020) என்பவர் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. அவற்றில் சில விருதுகளையும் பெற்றுள்ளன. இயக்குநராக, தயாரிப்பாளராக கிம் கி-டக் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை, 69வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது 'பயட்டா' திரைப்படத்திற்காகவும், 61வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருது சிறந்த இயக்குனருக்காக 3-அயன் திரைப்படத்திற்காகவும், 54வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிலவர் பீர் விருது சிறந்த இயக்குனருக்காக சமாரியா திரைப்படத்திற்காகவும் கிடைத்தது. மேலும் 2011 கேன்ஸ் பட திருவிழாவில் 'அன் சர்டர்ன் ரிகாட் பரிசு அரிராங்' படத்திற்காகவும் கிடைத்தது.
வாழ்க்கை மற்றும் தொழில்
கிம் கி-டக் திசம்பர் 20, 1960 ல் தென் கொரியாவில் போங்குவா எனும் இடத்தில் பிறந்தார். பாரிசில் நுண்கலையை 1990 லிருந்து 1993 வரை படித்தார். அதன் பின்பு தென் கொரியாவிற்கு வந்து திரைகதையாசிரியாராகப் பணியாற்றினார். 1995ல் நாடகமெழுதும் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.[1] அதனைத் தொடர்ந்து குரோக்கோடைல் எனும் குறைந்த செலவினாலான படத்தை 1996ல் எடுத்தார். தென்கொரியாவில் இப்படம் உணர்ச்சிகரமான அதிர்வலையை ஏற்படுத்தியது. இவரது ரியன் பிரிக்சன் திரைப்படம் 23வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]
2004ல் இவருடைய இயக்குநர் திறமைக்கு இரு திரைப்பட விழாவிருதுகள் வேறுவேறு படங்களுக்காக கிடைத்தது. பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் இவரது 'சமாரிடன் கேள்' (2004) மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் 3-அயன் (2004) படங்களுக்கா விருது பெற்றார். 2011ல் இவரது ஆவணப்படமான 'அரிராங்' திரைப்படத்திற்கு அன் சர்டர்ன் ரிகாட்விருது கான் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2012 வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இவரது பயட்டா திரைப்படத்திற்கு கோல்டன் லயன் விருதும் கிடைத்தது. இது சர்வதேச மூன்று திரைப்பட விழாக்களான வெனிஸ், பெர்லின், கேன்ஸ் ஆகியவற்றில் சிறந்த திகில் படத்திற்கான விருது வாங்கிய பெருமை பெற்றது.
இவர் 11 திசம்பர் 2020 அன்று, தனது 60வது பிறந்தநாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு, லாட்வியாவில் கோவிட்-19 தொற்றுநோயின் போது 59 வயதில் கோவிட்-19ஆல் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார்.[5][6][7][8][9]
↑"현지 언론 "김기덕 감독, 라트비아서 코로나19로 사망"" [Local media "Director Ki-deok Kim dies of Corona 19 in Latvia"]. news.jtbc.joins.com (in கொரியன்). 11 December 2020. Retrieved 11 December 2020.