கியோத்தோ நகரிய மாநிலம்கியோத்தோ நகரிய மாநிலம் (Kyoto Prefecture (京都府 Kyōto-fu?)) [[யப்பான்[ஜப்பானிலுள்ள]] ஒன்சூ தீவின் கன்சாய் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம்.[1] இதன் தலைநகர் கியோத்தோ நகரம்.[2] ஜப்பானின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படும் இப்பகுதி ஜப்பானிலுள்ள இரண்டு நகரிய மாநிலங்களில் ஒன்று, மற்றொன்று ஓசகா நகரிய மாநிலம். வரலாறுமெய்ஜி மறுசீரமைப்பு வரை, கியோத்தோ மாநிலம் உள்ள பகுதி யமஷீரோ என அழைக்கப்பட்டது.[3] வரலாற்றின் பெரும்பகுதியில், ஜப்பானியப் பேரரசின் தலைநகராக கியோத்தோ நகர் இருந்துள்ளது. இதன் வரலாற்றை ஆறாம் நூற்றாண்டிலிருந்தே அறியலாம். 544 இல், நல்ல அறுவடைக்காகவும் மற்றும் நல்ல காலநிலைக்காகவும் ஆவொய் மட்சுரி வழிபாடு கியோத்தோவில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போரின் ஆக்கிரமிப்பின் போது, அமெரிக்க ஆறாவது படை கியோத்தோவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தது. புவியியல்கியோத்தோ மாநிலம் கிட்டத்தட்ட ஒன்சூ தீவிற்கும் ஜப்பானுக்கும் மையமாக அமைந்துள்ளது. 4,612.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இது ஜப்பானின் நிலப்பரப்பில் 1.2% ஆகும். இது ஜப்பானில் 31வது இடம் வகிக்கின்றது. ஜப்பான் கடல் மற்றும் ஃபுக்கி மாநிலம் வடக்கிலும் ஓசகா மற்றும் நாரா மாநிலங்களைத் தெற்கிலும் மீ மற்றும் ஷீகா மாநிலங்களைக் கிழக்கிலும் ஹியோகொ மாநிலத்தை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தை நடுவில் பிரிக்கும் தன்பா மலைகளினால் இதன் வடக்கு ப்பகுதியும் தெற்குப்பகுதியும் மிகவும் மாறுபட்ட காலநிலைகளைக் கொண்டுள்ளன. 1 ஏப்ரல் 2012 நிலவரப்படி, மாநிலத்திலுள்ள மொத்த நிலப்பரப்பில் 6% இயற்கை பூங்காக்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் சனின் கைகன் தேசிய பூங்கா பிவாகோ, தங்கோ-அமனோஹஷிடட்டே-ஓயியமா மற்றும் வகாசா வான் குவாசி தேசிய பூங்காக்கள்; மற்றும் ஹொசுக்யோ, கசிகியாமா, மற்றும் ருரிக்கை மாவட்ட இயற்கை பூங்காக்கள் உள்ளன.[4] நிர்வாகப் பிரிவுகள்நகரங்கள்பதினைந்து நகரங்கள் கியோத்தோ மாநிலத்தில் அமைந்துள்ளன.
மாவட்டங்களும் சிற்றூர்களும்
பொருளாதாரம்கியோத்தோ பெருமளவில் சுற்றுலாவை நம்பியே உள்ளது. வடகியோத்தோவிலுள்ள தங்கோ தீபகற்பத்தில் மீன்பிடி தொழில் மற்றும் நீர் போக்குவரத்து உள்ளது, உட்கியோத்தோவில் வேளாண்மையும் வனவளமும் உள்ளன. நிண்டெண்டோவின் தலைமையிடமாக கியோத்தோ நகரம் உள்ளது. பண்பாடுஆயிரம் ஆண்டுகளாக யப்பானின் தலைநகராக இருந்த கியோத்தோ ஜப்பானின் பண்பாட்டுத் தலைநகராக இன்றும் இருந்துவருகின்றது. சுற்றுலாகியோத்தோ மாநிலம் யப்பானிலுள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலா ஈர்ப்பு தளம். கியோத்தோவில் நடைபெறும் விழாக்களில் சில
ஒவ்வொரு மடம் மற்றும் கோவில் நிகழ்வுகளில் சிலவற்றை பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றது.
கல்விகியோத்தோவிலுள்ள பல்கலைக்கழகங்கள்
விளையாட்டுகீழே பட்டியலிடப்பட்டுள்ள விளையாட்டு அணிகள் கியோத்தோவை அடிப்படையாகக் கொண்டவை.
மாநிலச் சின்னங்கள்
நட்றவுப்பகுதிகள்கியோத்தோ மாநிலம் பின்வரும் பகுதி / மாநிலங்களுடன் மாகாண அளவில் சகோதர / நட்புறவு கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.[5] இந்த உறவு கியோத்தோ மாநிலத்திலுள்ள நகரங்கள் பிற நகரங்களுடன் கொண்டுள்ள நட்றவிலிருந்து வேறுபட்டது.
சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia