கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து![]() கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball) (வான் இறைக்கல் என்றும் அழைக்கப்படுகிறது)[1] கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கும் இக்கருங்கல் உருண்டை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை அருகே சிறு குன்றின் மீது கீழே விழும் நிலையில் உள்ளது.[2][3][4] இக்கருங்கல் உருண்டை 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் 250 டன் எடையும் கொண்டது.[5] கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, குன்றின் சரிவில் நான்கடி பரப்பளவில் 1,200 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.[6] மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இக்கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்தைக் கண்டுச் செல்கின்றனர். பெயர்க்காரணம்இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பானையிலிருந்த வெண்ணெயை திருடித் தின்ற செயலை நினைவுகூரும் வகையில் இக்கல் உருண்டையானது கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படுகிறது.[1] வரலாறுபல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவன் கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 1908-இல் சென்னை மாகாணத்தின் ஆளுநாராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்தில் கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய உருண்டையான கல்லை, பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யானைகளின் உதவியால் குன்றுலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சி வெற்றிபெறவில்லை. 12 அக்டோபர் 2019 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் சீ சின்பிங் ஆகியோர் தங்களது இரண்டாவது "முறைசாரா உச்சிமாநாட்டின்" போது கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து முன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.[7][8] விவரங்கள்இந்த கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து பாறாங்கல் ஏறத்தாழ ஆறு மீட்டர் (20 அடி) உயரமும், ஐந்து மீட்டர் (16 அடி) அகலமும் கொண்டது. மேலும் சுமார் 250 டன்கள் எடையும் கொண்டது.[9] இது உயரமான அஸ்திவாரத்தின் மேல் ஒரு சரிவில் மிதந்து நிற்பதாகத் தெரிகிறது, இது இயற்கையாகவே அரிக்கப்பட்ட மலையின் பாறையாகும். இது 1,200 ஆண்டுகளாக அதே இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.[1][10] இப்பாறையின் பின்புறத்தில் உள்ள ஒரு பகுதி அரிக்கப்பட்டு, அரை கோளப் பாறை போல தோற்றமளிக்கும் அதே வேளையில், மற்ற மூன்று பக்கங்களிலிருந்தும் வட்ட வடிவமாகத் தெரிகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia