கீர்த்தனைகீர்த்தனை இறை இசைப் பகுதியைச் (வைதீக கானத்தை) சேர்ந்தது. சாகித்யம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சுரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுகிறது.[1][2][3] இதன் அங்கங்கள்கீர்த்தனைக்குப் பிறகு தான் கிருதி என்ற இசைவடிவம் தோன்றியது. கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரு வகையான சுரப் பகுதியைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தன்மைசாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப்பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். கீர்த்தனைகளை இயற்றியோர்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia