கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்
கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது.[1] நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.[2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில், 8°55′46″N 77°23′45″E / 8.929335°N 77.395865°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் அமையப் பெற்றுள்ளது. திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து மேற்கில் 44 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள பாவூர்சத்திரம் - சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ள கீழப்பாவூர் உள்ளது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia