குட்டை புதர் செடிகள்குட்டைப் புதர் செடிகள் (Shrubs) அல்லது குறுஞ்செடிகள் தரைக்கு மேல் தண்டுடன் கூடிய சிறிய செடி வகை ஆகும்.[1] இது ஓராண்டு, ஈராண்டுகள் மற்றும் பல்லாண்டுகள் வாழக்கூடிய தாவர வகையைச் சார்ந்தது.[2] ஓராண்டு வழக்கூடிய குறுஞ்செடியானது, ஓராண்டுக்குள் வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளை உருவாக்கி இறந்துவிடும். குறுஞ்செடி மீண்டும் விதையில் இருந்து முளைக்கத் தொடங்கும்.[3] ஈராண்டு மற்றும் பல்லாண்டு வாழக்கூடிய குறுஞ்செடியானது அதன் ஆயுட்காலம் முடிந்ததும் தாவரத்தின் ஒரு பகுதியானது தரைக்கு கீழ் பகுதியிலோ அல்லது தரையை ஒட்டிய பகுதியிலோ வாழும். ஈராண்டு ஆயுள் கொண்ட தாவரங்கள் தனது இரண்டாம் ஆண்டில் பூத்து, காய்த்து மடியும். புதிய தாவரமானது தரையை ஒட்டிய அல்லது தரைக்குக் கீழ் உள்ள உயிருள்ள தாவரப்பகுதில் இருந்து முளைக்கத் தொடங்கும். அவையாவன; வேர், தண்டு, தரையை ஒட்டிய தடித்த தண்டு பகுதி, அல்லது பலவகையான தரைகீழ்த்தண்டுகள், முறையே கிழங்குகள், தரைகீழ்த்தண்டுகள், வேர்த்தண்டுகள் மற்றும் வேர்க்கிழங்குகள் ஆகும். ஈராண்டு வாழக்கூடிய குட்டைச் செடிகளுக்கு உதாரணம் கேரட் ஆகும். பல்லாண்டு வாழும் குட்டைச் செடிகளுக்கு உதாரணம் உருளைக் கிழங்கு, பியோனி (பெரிய வெளிர்ச் சிவப்பு மலர்கள் கொண்ட தோட்டச் செடி), ஹோஸ்டா, புதினா மற்றும் சில புல் வகைகள் ஆகும். வேகமாக வளரும் குட்டைச்செடிகள் (குறிப்பாக ஓராண்டுத்தாவரம்) பயேனியர்கள் ஆகும். சில குட்டைத் தாவங்கள் பெரிதாக வளரக்கூடியவை. மியூசா வாழைமரம் இவ்வகையில் அடங்கும். பல்லாண்டு வாழும் சில குட்டைத் தாவரங்கள் இரண்டாம்நிலை வேரில், வளர்ச்சி வளையத்தை உருவாக்குவதைக் கொண்டு அதன் வயது தீர்மானிக்கப்படுகின்றன, இம்முறைக்கு ஹெர்ப்குரோனாலஜி என்று பெயர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia